latest news
Siragadikka Aasai: புது பிரச்னையில் சிக்கிய மனோஜ்… காரி துப்பிய முத்து.. அடுத்த விவகாரமா?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட்களுக்கான வார புரோமோ குறித்த தொகுப்புகள்.
ஏற்கனவே முக்கிய கதைகள் இன்னும் முடிக்கப்படாமல் நகர்த்தி கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் தேவையில்லாத கதையை கடந்த சில வாரங்களாகவே சிறகடிக்க ஆசை ஓட்டிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரமும் ஒரு கதையை பிடித்துள்ளனர்.
கடந்த சில வாரமாக ஓடி வந்த சீதா – அருண் பிரச்னையை ஒரு வழியாக முடித்து வைத்துள்ளனர். ஆனால் இந்த வாரம் புதிதாக ஒரு தேவையே இல்லாத ரூட்டாக ரதி – தீபன் காதல் கதை தாண்டி தற்போது கர்ப்ப விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதற்கு மனோஜ் கடந்த வார எபிசோட்டில் சென்று அதை கலைத்து விடலாம் எனப் பேசி அவர்களிடம் அகப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் முத்து சரியாக யோசித்து இரண்டு குடும்பங்களையும் பேச வைத்து கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

அவர்கள் நீங்கள் சரியாக பேசுகிறீர். ஆனால் உங்கள் அண்ணன் சரி இல்லையே என்கிறார். பின்னர் ரூமை திறந்து மனோஜ் மற்றும் ரோகிணியை காட்ட முத்து நான்தான் பாத்துக்கிறேனு சொன்னனே எனக் கேட்கிறார். மனோஜ் யாரிடமும் சொல்லாதேடா. என் மானமே போய்டும் என்கிறார்.
முத்து, இதை சொன்னா என் மானம் தான் போகும் எனத் திட்டிவிட்டு செல்கிறார். தேவையில்லாத இந்த கதை இந்த வாரம் பெரிய அளவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்து வீட்டில் கிரிஷ் இருப்பதால் வேறு சில திருப்பங்களும் நடக்கும் என்பது கணிப்பு. பொறுத்திருந்து பார்க்கலாம்.