Categories: latest news television

Siragadikka Aasai: சீதா – அருண் காதலுக்கு ஓகே சொன்ன முத்து… ஆனா இவ்வளோ சிம்பிளா முடியாதே?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் வார புரோமோ வெளியாகி இருக்கிறது.

தமிழ் சீரியல்களில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்தது சிறகடிக்க ஆசை. ஆனால் கதைக்களம் சரியாக இல்லாமல் தேவையில்லாத கதையால் டிஆர்பியில் முதலிடத்தினை இழந்து இருக்கிறது.

அந்த வகையில் கடைசி சில வாரங்களாக சிறகடிக்க ஆசை தொடரில் ஓரளவு ரோகிணி மீண்டும் பிரச்னையில் சிக்கி இருக்கிறார். இதனால் டிஆர்பியில் தற்போது நான்காவது இடத்தில் இடம் பிடித்துள்ளது சிறகடிக்க ஆசை.

தற்போது சீதா மற்றும் அருண் காதல் விஷயம் ஓடிக்கொண்டு இருந்தது. கடந்த வாரம் மீனாவின் தலைமையில் சீதாவை கரம்பிடித்துவிட்டார் அருண். இந்த விஷயம் தெரிந்து முத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் வித்தியாசமாக முத்து உயிர் காப்பாற்றிய பொண்ணுக்கு அவருக்கு பிடித்தவரையே கல்யாணம் செய்து வைக்கின்றனர். அந்த விஷேசத்துக்கு முத்துவை அழைத்து இருக்கின்றனர். அந்த மணமக்களை பார்க்கும் முத்துவிற்கு சீதா மற்றும் அருண் போல இருக்கிறது.

இதை தொடர்ந்து முத்து நான் செய்வது சரிதானா? சீதா வாழ்க்கையை நான் எப்படி தேர்வு செய்ய முடியும் என யோசிக்கும் முத்து சீதா வீட்டிற்கு சென்று அருண் வீட்டில் இருந்து பெண் கேட்டு வரச் சொல்லு என்கிறார். சீதா சந்தோஷம் கொள்கிறார்.

ஆனால் இது இவ்வளவு சிம்பிளாக முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அருண் பிரச்னை செய்ய போகிறாரா? இல்ல அருண் விஷயத்தை கண்டுபிடிப்பாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது

Published by
ராம் சுதன்