Connect with us

latest news

சன் குடும்ப விருதுகளில் மனம் கவர்ந்த கதாநாயகன் இவர்தான்…! அட அதைக்கூட தியாகம் செய்றாரே!

சன்டிவியில் சீரியலுக்கான விருதுகள் 2025 வழங்கப்பட்டது. அதில் மனம் கவர்ந்த கதாநாயகனுக்காக அதிக ஓட்டுகளை மக்களிடம் இருந்து வாங்கி வெற்றி பெற்றவர் சிங்கப்பெண்ணே கதாநாயகன் அன்பு. இவரைப் பற்றி அறிவிக்கும் முன்பு அவரைப் பற்றிய ஒரு டிராமாவை மேடையில் நடித்துக் காட்டினார்கள். அப்போது அன்பு சிறுவனாக இருக்கிறான். அவனது அப்பா சினிமாவில் எப்படி எப்படியோ சான்ஸ் கேட்டுப் பார்க்கிறார்.

இந்த மூஞ்சிக்கு யாரு ஹீரோ ரோல் தருவான்னு அவமானப்படுத்துறாங்க. அன்புவின் அம்மா அவரிடம் என்ன சினிமாவுல சான்ஸ் கிடைத்ததா? என்ன ரோல்னு ஆவலோடு கேட்டாங்க. நடிக்கிறேன். என் மனசுக்குள்ளேயே தான் நான் நடிச்சிக்கிட்டு இருக்கேன்னு அழுது புலம்புகிறார். இது சிறுவனான அன்புவின் மனதிற்குள் ஆழமாக பதிந்து விடுகிறது. அவன் அம்மாவிடம் நான் ஹீரோவாகிக் காட்டுகிறேன் என்று சபதம் இடுகிறான்.

அதற்காக நிறைய பர்பார்மன்ஸ் செய்து காட்டுகிறான். பெற்றோர்கள் ஆனந்தம் அடைகின்றனர். அவன் நினைத்தது போலவே சின்னத்திரை சீரியலில் ஜெயிக்கிறான். ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்த போதும் அவன் கடைசியில் சன்டிவியின் சீரியல் மூலமாக ஹீரோவாகி ஜெயித்துக் காட்டுகிறான்.

அவனுக்கு மனம் கவர்ந்த கதாநாயகனுக்கான விருதும் வழங்கப்படுகிறது. அதில் அவனை அழைக்கிறார்கள். ஆனந்தக் கண்ணீருடன் மேடைக்கு வருகிறான். நான் இனி தமிழ்நாட்டுக்காரன்தான். இவங்க தான் எனது மக்கள்னு நெகிழ்கிறான். இந்த விருதை அப்பா வாங்கியதாகத்தான் நான் நினைக்கிறேன்.

எனக்கு உறுதுணையாக இருந்த அம்மா, அப்பா, பவி, தோழி என அனைவருக்கும் நன்றி சொல்கிறான். என்னை விட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் மகேஷ். அவருக்கு இந்த விருதை டெடிகேட் பண்ணுகிறேன் என்றார். முன்னதாக அன்புவிற்கு அவரது அப்பாவே விருதைக் கொடுக்கிறார். நான் வாழ்க்கையில் ஒருமுறை கூட அப்பாவைக் கட்டிப்பிடித்ததில்லை.

இப்போது கட்டிப்பிடித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்கிறான் அன்பு. அதைப் பார்த்து சிங்கப்பெண்ணே தொடரில் நடிக்கும் ஆனந்தி, மித்ரா, கருணாகரன் எல்லாருமே மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கின்றனர். அதே போல மனம் கவர்ந்த கதாநாயகி விருதையும் ஆனந்திக்கேக் கொடுக்கின்றனர். சிங்கப்பெண்ணே கதாநாயகியான ஆனந்திக்கு சுந்தர்.சி. விருது கொடுத்து கௌரவித்தார். அந்த விருதை ஆனந்தி அவரது அம்மாவிடம் கொடுத்தார்.

அதே போல சிறந்த கதாநாயகன் விருது மூன்றுமுடிச்சுல நடித்த சூர்யாவுக்கும், சிறந்த நடிகையாக மூன்று முடிச்சு ஹீரோயின் நந்தினிக்கும் கொடுக்கப்பட்டது. அதே போல மனம் கவர்ந்த மெகாத் தொடரும் சிங்கப்பெண்ணேவுக்கே கிடைத்தது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top