1. Home
  2. Latest News

பரபரக்கும் சன்டிவி சீரியல்கள்… இந்த வாரம் டிஅர்பி ஹிட்டில் என்ன நடக்க போகுது?


Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் புரோமோக்களின் தொகுப்புகள்.

கயல்

கயிலை அழைக்கும் அவருடைய அம்மா, அன்பு அவர் பின்னால் சென்றால் தன்னை பழைய வேதவள்ளியாக பார்க்க வேண்டும் என மிரட்டி விட்டு செல்வதாக கூறுகிறார். மறுபக்கம் வேதவள்ளி மற்றும் சிவசங்கரி பேசிக்கொள்கின்றனர்.

கயல் தன்னுடைய அம்மாவிடம் அன்பு வேலைக்கான ஆர்டர் வாங்கியவுடன் அதை எடுத்துக் கொண்டு முதலில் அவர்கள் வீட்டில் தான் சென்று நிற்பேன். என் தம்பி ஆசைப்பட்ட வாழ்க்கையை அவனுக்கு அமைத்துக் கொடுக்காமல் விட மாட்டேன் என்கிறார்..

அன்னம்

அன்னம் வீட்டிற்கு புதிதாக வரும் ஆள்,நீ அன்னலட்சுமி தானே என கேட்கிறார். பின்னர் அன்னத்தின் அப்பாவிடம் எனக்கு அன்னத்தை பிடித்து இருக்கு மாமா கட்டிக் கொடு என்கிறார். ரம்யாவை அன்னம் அழைத்துக் கொண்டு வந்து கார்த்திக்கிடம் விட்டு செல்கிறார். நம்ம கல்யாணம் இவ கையில் தான் இருக்கு என கார்த்திக் சொல்கிறார்.

மருமகள்

சித்தப்பாவை மிரட்டும் பிரபு சின்னதா லீடு கிடைச்சா போதும். உன் ஆட்டமும் காலி உன் ஆடிட்டோரியமும் காலி என்கிறார். வேல்விழி சித்தப்பாவிடம் இப்பதான் ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது நம்மளா அந்த பிரபு ஆன மோதி பார்த்து விடலாம் டாடி என்கிறார்.

ஆதிரை தன்னுடைய அப்பாவிடம் எங்க அப்பா சொல்லி நான் எந்த விஷயத்தையும் கேட்காமல் இருந்ததே இல்லை. ஒரு விஷயத்தை மறுத்து பேசுறனா அது இந்த விஷயம்தான் என்கிறார். இதனால் மனோகரி கடுப்பாகிறார்.

மூன்று முடிச்சு

நந்தினி அருணாச்சலத்திடம் விஜி அக்கா கூட நான் வெளியே போயிட்டு வரட்டுமா என்று கேட்க எங்கம்மா போறீங்க எனக் கேட்கிறார்.

அர்ச்சனா சூர்யாவிற்கு ஃபோன் போட்டு தெரியாம தான் அந்த வேலைக்காரி கழுத்துல தாலி கட்டுனேன்னு எனக்காக ஒரு வாட்டி சொல்லு எனக் கேட்கிறர்.

அதற்கு சூர்யா, என்ன தெரியாமையா. எனக்கு எல்லாம் தெரியும் என்கிறார் சூர்யா. விஜியும் நந்தினியும் கோவிலுக்கு வர சூர்யாவும் அவரது நண்பரும் கோவிலுக்கு வருகின்றனர். நந்தினி விஜியிடம் என்னக்கா இவங்க ரெண்டு பேரும் இங்கே நிக்கிறாங்க என்கிறார்.

சிங்கப் பெண்ணே

போட்டி நடந்து கொண்டிருக்கிறது மித்ரா கருணாகரனிடம் நீங்க போய் உங்க கேமை ஆரம்பிங்க என்கிறார். ஆனந்திக்கு கையில் ஊசி குத்தி விட அங்கு வரும் அன்பு நான் இங்கதான் இருப்பேன் உன்னால் முடியும் தானே. எதனாலும் என்னை கூப்பிடு என கூறுகிறார்.

அந்த நேரத்தில் மகேஷ் வந்து ஆனந்தி எவ்வளவு அன்பு என்று கேட்க கருணாகரன் சொல்லுப்பா கேட்கிறார் இல்ல என்கிறார். அன்பு ஆனந்தி தான் கடைசியில் இருக்காங்க என்கிறார். இதனால் மித்ரா மற்றும் கருணாகரன் சந்தோஷப்பட ஆனந்தி கலங்குகிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.