Connect with us

latest news

Sun serials: எழிலின் கோபம்… நந்தினியின் கவலை… ஆதிரையின் சந்தேகம்… ஆனந்தியின் சவால்

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ அப்டேட்ஸ் குறித்த முக்கிய தொகுப்புகள்.

கயல்

எழில் சிவசங்கரிடம், கயல் என்னிடம் இருக்கும் காசுக்காகவோ, இல்லை என்னுடைய பிராண்டிற்காகவோ என்னை காதலிக்கவில்லை. என் மேல உண்மையான அன்பு தான் வச்சிருந்தா என்பதை நீங்கள் சீக்கிரம் புரிஞ்சிப்பீங்கம்மா என்கிறார்.

சிவசங்கரி, இவளுக்காக என்னையும் உன்னுடைய சொத்தையும் தூக்கி போடுறது நல்லா இல்லை என்கிறார். இதற்கு எழில் நீங்க இவ காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிற நாள் ரொம்ப தூரத்தில் இல்லை என்கிறார். இதை கேட்டு சிவசங்கரி அதிர்ச்சி அடைகிறார்.

சிங்கப் பெண்ணே

கருணாகரன் ஆனந்தியை பட்டிக்காடு நீ அவன் கூப்பிட்டா வந்துடுவியா என்கிறார். ஏன் வரக்கூடாது என ஆனந்தியும் பதிலுக்கு கேட்கிறார். இதுல ஆனந்த் எதுவும் சொதப்பி வச்சா நம்ம கம்பெனியோட மானம் தான் சார் போகும் என்கிறார் கருணாகரன்.

இதனால் கடுப்பாகும் மகேஷ் மித்ரா என கத்துகிறார். இதற்கு ஆனந்தி இதை நீங்கள் சவால்னே வச்சுக்கோங்க. நான் தயார் நீங்க தயாரா எனக் கத்துகிறார்.

மருமகள்

பிரபு ஊறுகாயை சாப்பிட போக அதை ஆதிரை தடுத்து விடுகிறார். இந்த ஊறுகாய நீங்க சாப்பிடாதீங்க எனக் கூற சித்தி ஏன் ஆதிரை என்கிறார். இதில் எதுவும் கலந்திருக்குமோ என சந்தேகம் இருப்பதாக ஆதிரை கூறுகிறார். குமார் பயத்தில் முழிக்கிறார்.

செந்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே வேல்விழிக்கு தாலி கட்ட மஞ்சள் கயிறுடன் நிற்கிறார். இதை பார்த்து வேல்விழி அதிர்ச்சியுடன் நிற்கிறார். ஊறுகாயை தான் சாப்பிடுவதாக சித்தி கூற ஆதிரை அதை தடுக்கிறார். குமார் சாப்பிட வேண்டியது தானே என பிரபு கூறுகிறார்.

மூன்று முடிச்சு

நந்தினியிடம் சுந்தரவல்லி அவன் எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் தெரியுமா? அவனை போய் என அடிக்க பாய்கிறார். அருணாச்சலம் சூர்யாவிடம் சுந்தரவல்லி வழக்கம் போல கோபப்பட்டு ஏதாவது பண்ணா அந்த இடத்தில் நீ இருந்தா அவ விலகி போய்டுவா என்கிறார்.

மறுபக்கம் அம்மாச்சிக்கு நந்தினி போன் போடுகிறார். ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து விட்டுக்கிட்டே இருக்காங்க என சொல்ல எனக்கும் அப்படித்தான் தோணுது என்கிறார் நந்தினி.

Continue Reading

More in latest news

To Top