Connect with us

latest news

கயலின் பிரச்னை… நந்தினியின் வேண்டுதல்.. வேல்விழியின் கோபம்… ஆனந்தியின் போட்டி!..

Sun Serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி ஹிட் சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் புரோமோ தொகுப்புகள்.

கயல்

எழிலிடம் இருந்து இவ்வளவு நாள் மறைச்ச உண்மை மொத்தமாக அவருக்கு தெரிந்து விட்டது. இதனால் வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்தது. சிவசங்கரியை உங்களை என் அம்மானு சொல்லவே வெட்கமா இருக்கு என்கிறார்.

கயல் உன்னுடைய சொத்து காசுக்காக தான் உன்னுடன் இருப்பதாக கூறுகிறார். இதைக் கேட்கும் எழில் தன்னுடைய சொத்தை தூக்கி எறிந்து விட்டு சிவசங்கரி ராஜசேகர் உடைய மகன் நான் எழில் இல்லை எனக் கூறிவிட்டு கயலை அழைத்துக் கொண்டு வெளியேறுகிறார்.

மூன்று முடிச்சு

நந்தினி வீட்டிற்கு சிலர் வருவதை சுந்தரவல்லி பார்க்கிறார். அருணாச்சலம் நந்தினி இடம் இதற்கு முன்னர் நீங்க வேலை செய்தாய் அதனால் ஐயா என்று கூப்பிட்டு பழகிட்ட. இப்பதான் என் மருமகள் என அவர் கூற மருமகள் இல்ல ஐயா மருமகள் மாதிரி என்கிறார்.

நந்தினி வேலை செய்து கொண்டிருக்க அங்கு வரும் சுரேகா தென்னைமட்ட என்ன பண்ற என கலாய்க்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் அருணாச்சலம் சுரேகா நந்தினி இந்த வீட்டில் மருமகள் என்கிறார். சுந்தரவல்லி அவளே இந்த வீட்டில் ஒரு பிசு. அவ அம்மாக்கு இங்க திதி கொடுக்கிறாளா என கோபமாக வருகிறார்.

மருமகள்

வீட்டில் பிரச்சனை வெடிக்க ஆதிரை, வேல்விழி நான் அப்படி சொல்லலை எனக் கூற வருகிறார். இதில் கடுப்பாகும் வேல்விழி மம்மி யாரையும் இதில் தலையிட வேண்டாம் என சொல் என்கிறார். ஏகாம்பரம் அவர்களை வெளியில் போக சொல்ல செந்தில் எனக்கும் அம்மாக்கும் நீங்கதானே இருக்கீங்க என்கிறார்.

ஆதிரை அவர்களை வீட்டிற்கு அழைத்து வர பாட்டி இவங்களை இங்கே அழைத்து வரலாமா என கேட்கிறார். அதற்கு பிறகு நான் கூட்டிட்டு வரலை ஆதிரைதான் கூட்டிட்டு வந்ததாக கூறுகிறார்.

சிங்கப் பெண்ணே

ஆனந்தி மற்றும் உஷா இடையே போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது அன்பு இதை போட்டியா நினைக்காதே. உன் வாழ்க்கை உன் லட்சியம் எனக் கூறுகிறார். மித்ரா ஆனந்தி வேகமா தைக்கிற மாதிரி இருக்கு எனக் கூற உஷாதான் ஜெய்ப்பா என்கிறார் கருணாகரன்.

திடீரென ஆனந்தியின் வேகம் குறைய அருகில் இருப்பவர்கள் என்னாச்சு எனக் கேட்கும் போது மிஷின் வேலை செய்யவில்லை எனக் கூறுகிறார் ஆனந்தி. இதைக்கேட்டு கருணாகரன் மற்றும் மித்ரா இருவரும் சந்தோஷம் கொள்கின்றனர்.

Continue Reading

More in latest news

To Top