Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகளுக்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.
சிங்கப் பெண்ணே
ஆனந்திக்கு விபத்து நடந்திருக்கிறது. இதை மித்ரா ஆனந்தியால போட்டியிட மட்டுமில்ல கருணாகரன் விட்டுவிட்டு எழுந்திருக்கவே அடுத்தவங்களோட உதவி தேவைப்படும் என்கிறார். மறுபுறம் அன்பு அம்மா அவசரமா இவ எங்க கிளம்புகிறான் என தங்கையிடம் கேட்கிறார்.
அன்பு, ஆனந்தி வழுக்கி விழுந்துட்டாளாம். நான் அவளை பார்க்க போறேன் எனக் கூறுகிறார். ஹாஸ்டலில் ஆனந்தி எழ முயல இந்த வலியோட போட்டியில் கலந்துவிட்டால் தோற்றுவிடுவாய் என்கின்றனர் தோழிகள். ஆனந்தி, அப்படி சொல்லாத காயத்ரி நான் ஜெயிச்சே ஆகணும் என்கிறார்.
மூன்று முடிச்சு
சுந்தரவல்லி இந்த வீட்டில் அசிங்கமா ஒருத்தி வந்து உட்கார்ந்து இருக்காள். அவளை வெளியே அனுப்ப நீங்க ஒன்னும் யோசிக்கிற மாதிரி தெரியல என்று மாதவி சுரேகாவை திட்டுகிறார். மறுபக்கம் திதிக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்த சூர்யா நந்தினியிடம் கொடுக்கிறார். சூர்யா உனக்கு என்ன செய்ய தோணுதோ செய் என்கிறார். நந்தினி இதையும் உங்க அம்மாவை வெறுப்பேத்தறதுக்காக தானே பண்றீங்க என கேட்க, நீ யோசிக்கிறது தப்பு உனக்காக தான் பண்ற என்று சொல்லுகிறார்.
அன்னம்
அன்னத்தை அவர் அத்தை இவ எப்படியாவது என் பையனை வளைச்சு போட அவ பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கா என்கிறார். இதனால் மாமா கோபமாகி தன்னுடைய மனைவியிடம் ஒருவேளை அவ இந்த வீட்டோட மருமகளா வரணும்னு இருந்தா அதை அந்த ஆண்டவனால கூட தடுக்க முடியாது என்கிறார். அன்னம் தன்னுடைய மாமன் மகளிடம் எதுக்கு வந்துச்சு எனக் கேட்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை என்கிறார்.
மருமகள்
பிரபு அத்தையிடம் எனக்கு நீங்க வந்ததது பிடிக்கலை. அதான் என்னுடைய மாமனாரிடம் சொன்னேன் என்கிறார். பைனான்சியரிடம் பிரபு இன்னும் ஒரு வாரம் டைம் கொடுங்க எனக் கேட்கிறார். அவரோ என் காலில் விழுந்து கேள் டைம் தரேன் எனச் சொல்கிறார்.
ஆதிரை அழுதுக்கொண்டு இருக்க பிரபு எதுக்கு அழுகுற எனக் கேட்க உங்களை கல்யாணம் செஞ்சி ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்ல. அதை நினைச்சு ஆனந்த கண்ணீர் வடிச்சிக்கிட்டு இருக்கேன் என்கிறார்.
Kantara Chapter…
Pradeep Ranganathan:…
Hariskalyan: இந்த…
STR49: முன்னணி…
Biggboss: விஜய்…