Categories: latest news television

TRP: இந்த வாரமும் முதலிடம் இந்த சீரியலுக்கா? சன் டிவிக்கே டஃப் கொடுக்கும் விஜய் டிவி!

TRP: பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இந்த வாரம் டாப் 10 இடத்தினை பிடித்து இருக்கும் தொடர்களின் சூப்பர் தொகுப்புகள்.

எல்லா வாரம் போல இந்த முறையும் சன் டிவி தொடர்களே டாப் இடத்தினை தக்க வைத்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பத்தாவது இடத்தினை விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் பிடித்துள்ளது. பரபரப்பான கதைக்களத்தில் மீண்டும் டாப் 10க்குள் நுழைந்துள்ளது.

ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் ராமாயணம் சீரியல் இடம் பிடித்துள்ளது. எட்டாவது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 இருக்கிறது. அரசியின் கதைக்களம், செந்தில் அரசு வேலை என்பதால் இன்னும் டிஆர்பியில் நல்ல மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஏழாவது இடத்தில் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே நெகட்டிவ் கதைக்களத்தால் இந்த சீரியல் டாப் 5க்குள் கூட நுழைய முடியாமல் திணறி வருகிறது. சன் டிவியின் அன்னம் தொடர் ஆறாவது இடத்தில் உள்ளது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் நல்ல வரவேற்பு பெற்று முன்னேறி வருகிறது. இதன்மூலம் இந்த வாரம் இந்த சீரியல் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

நான்காவது இடத்தில் விஜய் டிவியின் டாப் 1 தொடராக சிறகடிக்க ஆசை இடம் பெற்றுள்ளது. வரும் வாரங்களில் இந்த சீரியலின் டிஆர்பியில் நல்ல மாற்றம் இருக்கும் என்பதால் டாப் 3க்குள் நுழையும் என்றே கருதப்படுகிறது.

எப்போதும் போல சன் டிவியின் முக்கிய சீரியலான மருமகள் மற்றும் மூன்று முடிச்சு மகாசங்கமம் முதல் இடம் பிடித்துள்ளது. அதே போல சன் டிவியின் சிங்கப்பெண்ணே மற்றும் கயல் சீரியல் டாப் 2 மற்றும் டாப் 3வது இடத்தில் இருக்கிறது.

Published by
ராம் சுதன்