Connect with us

latest news

டாப் குக்கு டூப் குக்கு சீசன்2க்கு நோ சொல்லும் பிரபலங்கள்… இதான் இத்தனை லேட்டா?

Top Cooku Dupe Cooku: விஜய் டிவியின் தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன் சன் டிவியில் இணைந்த பிறகு உருவாக்கிய டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 குறித்த அப்டேட்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சிக்கு புதிய பரிமாணமாக வெளியானது குக் வித் கோமாளி. முதல் சீசன் தொடங்கப்பட்ட போதே இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக பார்க்கப்பட்டது. மீடியா மேசன் தயாரித்த இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருந்தனர்.

ஒவ்வொரு சீசனிலும் முக்கிய பிரபலங்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு விஜய் டிவியின் பிரபலங்கள் கோமாளிகளாக களமிறங்கினார்கள். முதல் சீசன் தொடர்ந்து இரண்டாவது சீசன் மிகப்பெரிய வகையில் ஹிட்டடித்து ஆச்சரியப்படுத்தியது.

பின்னர் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது மற்றும் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன் வெளியேறியது. அவர்களுடன் வெங்கடேஷ் பட்டும் வெளியேறினார்.

அந்த கூட்டணியில் சன் டிவியில் ஒளிபரப்பானது தான் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் சன் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். விஜய் டிவியில் இருந்து சிலரையும் டூப் குக்காக உள்ளே கொண்டு வந்தனர்.

ஆனால் குக் வித் கோமாளியின் வரவேற்பை பெற முடியவில்லை. முதல் சீசன் குக் வித் கோமாளியுடன் ஒளிபரப்பானது. ஆனால் தற்போது ஆறாவது சீசன் குக் வித் கோமாளி தொடங்கி ஏழு வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 குறித்த அறிவிப்பு இல்லாமல் இருந்தது.

இதுகுறித்து விசாரிக்கும் போது நிறைய சின்னத்திரை பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வாய்ப்பு வந்த போது மறுத்து விட்டனராம். ஏன் ரிஜெக்ட் செய்தார்கள் என்ற காரணம் அறியப்படவில்லை. அதனால் பிரபலங்கள் இல்லாமலே இந்த சீசன் தள்ளிக்கொண்டு போய் இருக்கிறது. இப்போது வரை இன்னும் பிரபலங்கள் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in latest news

To Top