ஒரு காலத்தில் சினிமா சினிமான்னு அது பின்னாடியே போய்க்கிட்டு இருந்தாங்க. எப்படியாவது சினிமாவுக்குள்ள போய் சாதிக்கணும்னு நினைப்பாங்க. ஆனா டிவி வந்த பிறகு ஆங்கரா போறதுக்கு நிறைய பேரு ஆர்வமா இருக்காங்க. அதிலும் விஜய் டிவியில் தான் போய்ச் சேரணும். அங்கு போனா அடுத்தடுத்த வாய்ப்புகளை அவங்களே கொடுப்பாங்க.
பெரிய ஆளா ஆகிடலாம்னு நிறைய பேர் வாய்ப்பு தேடி படையெடுத்து வர்றாங்களாம். அந்த வகையில் விஜய் டிவியில் எந்த தொகுப்பாளர் அதிக சம்பளம் வாங்குறாங்க? அப்படின்னு டாப் 10 ஆங்கர்ஸோட பட்டியலைப் பார்க்கலாம்.
10வது இடத்தில் இருப்பவர் ஆங்கர் ஏஞ்சலின். ஜோடி ஆர் யு ரெடின்னு ஒரு புரோகிராமை ஆங்கர் ஏஞ்சலின் தொகுத்து வழங்குறாங்க. அதுல ஒரு நாளைக்கு மட்டும் 20 ஆயிரம் சம்பளமா வாங்குறாங்க. அந்த ஷோ ஒரு எபிசோடு ஒரு நாள் முழுக்க நடக்கும். இப்போ இவங்களுக்கு ஜனநாயகன் படத்துலயும் ஒரு சின்ன ரோல்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்குதாம்.
அறந்தாங்கி நிஷா 9வது இடத்தில் இருக்கிறார். சமூக சேவையும் செய்து வருகிறார். இவங்க விஜய் டிவியில ஒரு ஷோவுக்கு 30 முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்குறாங்களாம்.
8வது இடத்தில் இருப்பவர் ஆங்கர் மணிமேகலை. இவருக்கும் ஆங்கர் பிரியங்காவுக்கும் கூட இடையில் பிரச்சனை வந்தது. ஒரு ஷோக்கு 60 ஆயிரம் சம்பளம் வாங்குறாங்களாம்.
7வது இடத்தில் இருப்பவர் ஆங்கர் ரக்ஷன். இவருக்கு பட வாய்ப்பும் வந்தது. குக் வித் கோமாளியில் இவர் தான் ஆங்கர். இவர் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் 80 ஆயிரம்.
6வது இடத்தில் ஆங்கர் கேபிஒய் பாலா இருக்கிறார். நடிக்கிறதுக்கு ஹீரோ வாய்ப்பும் கிடைத்தது. அவருக்கு ஒரு புரொக்ராம் வந்தா 1 லட்சம் சம்பளமாம்.
5வது இடத்தில் இருப்பவர் ஆங்கர் ரியோ ராஜ். படங்கள்ல ஹீரோவாகவும் நடித்தார். ஜோ படத்தில் நடித்தார். மீண்டும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. ஜோடி ஆர் யு ரெடி என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இவர் ஒரு எபிசோடுக்கு 1லட்சத்து 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.
4வது இடத்தில் இருப்பவர் ஆங்கர் மாக்காப்பா. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இவர் ஒரு எபிசோடுக்கு 2 முதல் 2.5 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.
3வது இடத்தில் மாக்காப்பாவின் காம்போ ஆங்கர் பிரியங்கா தான் உள்ளார். டிடி இடத்தைப் பிடித்தவர் தான் பிரியங்கா. இன்னும் இவர் இடத்தை யாரும் நெருங்க முடியவில்லை. இவர் ஒரு எபிசோடுக்கு 2.5-2.8லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறாராம்.
டாப் 2வில் இருப்பது ஆங்கர் டிடி தான். இவர் பள்ளிப்பருவத்திலேயே விஜய் டிவியில் ஆங்கராக சேர்ந்து விட்டார். அப்போது ஒரு எபிசோடுக்கு 3000 ரூபாய் தான் சம்பளம் வாங்கினாராம். இப்போ ஒரு முக்கியமான ஷோ என்றால் டிடி தான் ஆங்கர். ஒரு எபிசோடுக்கு 3லட்சம் வரை சம்பளமாக வாங்குகிறாராம்.
டாப் 1ல இருப்பவர் கோபிநாத். இவரது நீயா, நானாவுக்குன்னு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் எந்த புரொகிராம் பண்ணினாலும் 4 முதல் 5 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம். நீயா நானாவுக்கு 3.5லட்சம் வரை வாங்குகிறாராம்.
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…