Connect with us

Cinema News

பிரியாமணியை பார்த்து ஃப்ரீயா வருவீங்களா?.. இல்லை காசுக்கு வருவீங்களான்னு கேட்ட தொகுப்பாளர்?…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை பிரியாமணி. சமீபத்தில் புதிதாக தெலுங்கு படம் புரமோஷனுக்கு மேலும் இரு இளம் நடிகைகளுடன் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்தப் பேட்டியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் டபுள் மீனிங்கில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

40 வயதை நெருங்கிய பிரியாமணி இந்த வயதிலும் தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்த கஸ்டடி படத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் அந்த படம் வெளியானது. அதில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: டெரர் லுக்கில் சும்மா மிரட்டுறாரே தனுஷ்!.. அதிர வைக்கும் ராயன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!..

மேலும் கடந்த ஆண்டு இறுதியில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான நேரு படத்திலும் எதிர் தரப்பு வழக்கறிஞராக திறமையாக வாதாடி கடைசிவரை போராடும் நபராக நடிப்பில் மிரட்டி இருந்தார். ஹிந்தியில் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ்களில் ஹீரோ மனோஜ் பாஜ்பாயின் மனைவியாக நடித்துள்ளார். இந்த வாரம் தெலுங்கில் பாமகலாபம் 2 படம் அவர் நடிப்பில் வெளியானது.

அந்த படத்தின் புரமோஷனுக்காக தெலுங்கு மீடியா ஒன்றில் அளித்த பேட்டியின் போதுதான் அந்தத் தொகுப்பாளர் அப்படி ஒரு கேள்வியை கேட்டுள்ளார். பிரியாமணியுடன் நடிகை சீரத் கபூர் அந்தப் பேட்டியில் இணைந்திருந்தார்.

இதையும் படிங்க: மணிய போட்டு மறச்சாலும் மானம் போகுது!.. தூக்கலான கிளாமரில் அதிர வைக்கும் ஜான்வி கபூர்…

அவரை கலாய்த்து வந்த தொகுப்பாளர் திடீரென பிரியாமணியை பார்த்து நீங்க ஃப்ரீயா இல்ல காசுக்கு வருவீங்களா என சொல்லிவிட்டு சின்ன கேப் விட்டு உடனே ஷூட்டிங்கிற்கு என அவர் சொன்னதும் சட்டென பிரியாமணியின் முகம் மாறி திரும்பவும் ஷூட்டிங்கிற்கு என சொன்னதை கேட்டதும் சிரித்து விட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top