×

தனித்து களமிறங்கும் தேமுதிக - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!

இன்று தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் பிறந்தநாளில் கட்சியின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.  பேட்டியில் பேசிய அவர், தேமுதிகவினர் தேர்தலில் தனித்து நிற்க விரும்புவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின்  விருப்பம் என்றும், விஜயகாந்த் இனி ‘கிங்’ஆக இருக்க வேண்டும் என்பது தேமுதிக தொண்டர்களின் எண்ணம் என்றும் தெரிவித்த அவர் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கூட்டணியா? தனித்துப் போட்டியா? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.

தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது. இருந்தும் தேமுதிகவிற்கு வாய்ப்புகள் வழங்காத அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது பிரேமலதா இவ்வாறு பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News