×

பிரபல பாடகிக்கு கொரோனா... வெளியான டெஸ்ட் முடிவுகள்...

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க மத்திய அரசாங்கம் வரும் 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பல பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி வருகிறது. 
 

சமீபத்தில் இந்திய பாடகி கரீனா கபூருக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு. மருத்துவமனையில் இருந்த அவர் சமீபத்தில் தான் வீடு திரும்பியுள்ளார்.

இன்னொரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. புகழ் பெற்ற அமெரிக்க பாடகி டிவா மடோனாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்த செய்தியை உறுதிபடுத்திய அவர் "சமீபத்தில் எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், என் உடம்பில் கொரோனா(Antibodies Test) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை என் காரில் ஒரு நீண்ட பயணம் செல்லப் போகிறேன். கொரோனா காற்றை சுவாசிக்க தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அமெரிக்க நோய் தடுப்பு துறை இதை பற்றி " இதுபோன்ற ஆன்டிபாடி(Antibody) டெஸ்டுகள் ஒருவரது  உடல் கொரோனா வைரஸ்களை எதிர்கொண்டுள்ளதா என்றும், நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன்கள் அதை எதிர்த்து செயல்படும் அளவிற்கு வலிமை வாய்ந்ததா என்றும் கண்டறிய உதவுகிறது. இவரது உடல் கொரோனா வைரஸ்களை தாங்கும் சக்தி உள்ளதா என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளது.

View this post on Instagram

#staysafe #staysane

A post shared by Madonna (@madonna) on

From around the web

Trending Videos

Tamilnadu News