தாடி பாலாஜி மகளா இது? அடையாளமே தெரியாமல் வளர்ந்துட்டாங்களே!
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகரும் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தும் பிரபலமானவர் தான் தாடி பாலாஜி. இது தவிர இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.
இவர் நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் தாடி பாலாஜி தன்னுடைய மனைவி நித்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு போஷிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார் .

பாலாஜியின் மனைவி நித்தியா ஆரம்பத்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். அப்போது அவரது மகள் போஷிகா குழந்தையாக இருந்து நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது பல வருடங்கள் கழித்து டீன் ஏஜ் வயசில் வளர்ந்திருக்கும் அவரது மகளை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள். குழந்தையாக பார்த்த போஷிகாவா இது இவ்வளவு பெரிய ஆளா வளர்ந்துட்டாங்களே நமக்கு தான் வயசு ஆகிடுச்சா என பலரும் வியந்துவிட்டனர்.
