
Cinema News
Vijay:மனசாட்சி இருந்திருந்தால் வந்திருப்பாங்க.. விஜய் நேரில் வரணும்! தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி
தங்கள் வேலையை நிரந்தரமாக்குவது, சம்பள உயர்வு என்ற அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து 13 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைப்பற்றி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் விஜய் நேற்று துப்புரவு பணியாளர்களை தங்கள் பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து அவர்களுடைய கோரிக்கையை கேட்டுக் கொண்டு தன்னால் முடிந்த உதவியை செய்வதாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று தாடி பாலாஜி துப்புரவு பணியாளர்கள் போராட்ட களத்திற்கே நேரில் சென்று பல கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். சென்னை மாநகரத்தின் உண்மையான நாயகன் நாயகிகளே இவர்கள்தான். நான் ஏன் இவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்றால் பிக் பாஸில் என் மீது குப்பை கொட்டிய பிறகுதான் இதனுடைய அருமை எனக்கு தெரிந்தது.
அதனால் தான் நேரில் வந்திருக்கிறேன். அதனால் மாண்புமிகு அமைச்சர் கே என் நேரு இவர்களின் கோரிக்கையை கேட்டு அறிந்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் செய்ய வேண்டும். முடிந்தால் இவர்களுக்காக நானே அமைச்சர் நேருவிடம் சென்று என்னால் முடிந்தவற்றை கண்டிப்பாக செய்வேன் என தாடி பாலாஜி கூறி இருக்கிறார். மேயர் அருகில் தான் இருக்கிறார். நேருவும் அருகில் தான் இருக்கிறார்.
அவர்கள் இந்த களத்திற்கு நேரில் வந்திருக்க வேண்டும். கண்டிப்பாக வரவேண்டும். மனசாட்சி உள்ளவர்கள் என்றால் கண்டிப்பாக வரவேண்டும் என தாடி பாலாஜி கூறினார். உடனே பத்திரிக்கையாளர்கள் விஜய் துப்புரவு பணியாளர்கள் சந்திப்பை பற்றி கேட்டனர். அதற்கு தாடி பாலாஜி, தலைவர் நேரில் அழைத்து பேசினார். அது சரிதான். ஆனால் அவர் இங்கு இந்த களத்திற்கு வந்திருக்க வேண்டும்.
வந்திருந்தால் இன்னும் நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். இந்த மாதிரி மூன்று வாய்ப்புகளை தலைவர் தவற விட்டு விட்டார். களத்திற்கு அவர் கண்டிப்பாக வரவேண்டும் என கூறினார் தாடி பாலாஜி. மேலும் மதுரை மாநாட்டில் கலந்து கொள்வீர்களா என்ற ஒரு கேள்வியும் அவரிடம் முன்வைக்க, தெரியவில்லை பார்ப்போம். நல்லபடியாக நடக்கட்டும் எனக் கூறிய தன்னுடைய பேட்டியை முடித்துக் கொண்டார் தாடி பாலாஜி.