இந்த ஆண்டு இதுவரை தாய் கிழவி தான் நம்பர் ஒன்!.. 75 நாட்களில் எத்தனை கோடி வசூல்னு பாருங்க!..

 
இந்த ஆண்டு இதுவரை தாய் கிழவி தான் நம்பர் ஒன்!.. 75 நாட்களில் எத்தனை கோடி வசூல்னு பாருங்க!..

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த தாய்கிழவி திரைப்படம் வெளியாகி 75 நாட்களை கடந்த நிலையில் இப்படத்தின் வசூல் சாதனையை குறிப்பிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

தாய் கிழவி படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் சிங்கம் புலி, பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை தாய் கிழவி தான் நம்பர் ஒன்!.. 75 நாட்களில் எத்தனை கோடி வசூல்னு பாருங்க!..

இப்படத்தின் கதை, பேராசையால் வாழும் மகன்கள் மற்றும் அவர்களின் தாயைச் சுற்றி நகர்கிறது. படத்தில் ராதிகா நடித்த “பவுனுத்தாய்” கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த திரைக்கதையால் படம் ரசிகர்களை கவர்ந்தது.

குடும்ப பின்னணியுடன் உருவான இந்த படம், பெண்மையை மையமாகக் கொண்ட கதைக்களம் மற்றும் ராதிகாவின் உணர்ச்சி பூர்வமான நடிப்பால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் படம் தொடர்ந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.

அந்த போஸ்டரில், தாய்கிழவி திரைப்படம் உலகளவில் ரூ.90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதுடன், ரூ.90 கோடி வசூல் என்ற தகவலும் வெளியாகியுள்ளதால், இந்த படம் இந்தாண்டின் முக்கிய வெற்றி படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 100 கோடி போஸ்டர் வெளியானாலும் அந்த படத்தின் பட்ஜெட் அதைவிட அதிகம் என்பதால் படம் தோல்வியடைந்தது எனக் கூறப்பட்டது. கென் கருணாஸின் யூத் படம் 82 கோடி வசூல் என வெளியிடப்பட்ட நிலையில், தாய் கிழவி படம் தான் இதுவரை இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக உள்ளது. தனுஷின் கர படம் 40 முதல் 50 கோடி வசூலையும் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி 66 கோடி வசூலையும் ஈட்டியுள்ளன.

From Around the web