
latest news
அஜித்திடம் இருக்கும் அதே விஷயம் ரஜினி பட நடிகையிடமும்!.. சும்மா கெத்து காட்டுறாரே!…
Published on
By
தமிழ் சினிமாவில் முறையான பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர் தல அஜித்தான். அப்படியான பைலட் லைசென்ஸ் நடிகை ஒருவரும் வைத்திருக்கிறார்.
நடிகர் அஜித்துக்குப் பிடித்த விஷயங்கள் பட்டியலில் மோட்டார் சைக்கிள், கார், போட்டோகிராஃபிக்கு அடுத்த இடம் ஏரோ மாடலிங் எனப்படும் விமானங்களை வடிவமைக்கும் துறைக்கு உண்டு. இந்தத் துறையில் இருக்கும் ஈடுபாடு காரணமாக முறைப்படி விமானம் ஒட்டி பயிற்சி பெற்று லைசென்ஸ் வாங்கினார்.
இதையும் படிங்க: செல்லாது… செல்லாது.. ஜோதிகாவின் முதல் படம் அஜித் கூட இல்ல… விஜய் படம் தானாம்…
இதையடுத்தே எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் குழுவான தக்ஷாவின் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில், அஜித்தைப் போலவே இன்னொரு நடிகையிடமும் பைலட் லைசென்ஸ் உண்டு. அது 1980களில் முன்னணி நடிகையாகத் தமிழில் கலக்கிய மாதவிதான்.
சூப்பர்ஸ்டாரின் தில்லுமுல்லு, உலக நாயகன் கமலின் காக்கிச்சட்டை, ராஜபார்வை உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நாயகி இவர்தான். திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பின்னர், தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கிறார் நடிகை மாதவி. இந்தத் தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு மாதவியின் கணவர் சிறிய ரக விமானம் ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த விமானத்தை ஓட்ட பைலைட் ஒருவரையும் நியமித்தார். ஆனால், தங்களது சொந்த விமானத்தை நாமே ஓட்ட வேண்டும் என்று நினைத்த மாதவி, அதற்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சியும் மேற்கொண்டார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்து பைலைட் லைசென்ஸையும் மாதவி பெற்றிருக்கிறார்.
இதையும் படிங்க: பிடிக்காத படத்தை ராவுத்தருக்காக ஓகே செய்த கேப்டன்… தியேட்டரை அசரடித்த வசூல் வேட்டை!…
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு...
Karur: தவெக தலைவரும் நடிகருமான விஜய் கடந்த 27ம் தேதி தேர்தல் பரப்புரைக்காக கரூர் சென்றிருந்தார். மதியம் 12:3 மணிக்கு வருவார்...
STR49: சினிமாத்துறை என்றாலே எல்லாவற்றுக்கும் அடிப்படை வாய்ப்புதான். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என யாராக...
Vijay TVK: தற்போது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...
Idli kadai : நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், நித்யா...