×

மீண்டும் துண்டு போட்ட போனிகபூர் - கை விரித்த தல அஜித்!

 
மீண்டும் துண்டு போட்ட போனிகபூர் - கை விரித்த தல அஜித்!

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில்  சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

போனிகபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் முதலில் நடித்தார். தற்போது 2வதாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். அடுத்த படமும் நானே தயாரிக்கிறேன்.. நடிக்கிறீர்களா? என போனிகபூர் அஜித்திடம் துண்டு போட்டாராம். ஆனால், அஜித் ‘நோ’ சொல்லிவிட்டாராம்.  ஆனால், 3வது படத்தை இயக்கப்போவது வினோத் என்பதில் மாற்றமில்லை. அனேகமாக சத்யஜோதி தியாகராஜன் அஜித்தின் அடுத்த தயாரிக்கலாம் என நம்பப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News