×

என்னது வலிமை படம் ஓடிடியில்  ரிலீஸ் ஆகிறதா?

எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

 
pjimage-2021-03-15t165525-1615807533

எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

தல அஜித்தை வைத்து எச்.வினோத் இப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி அடைந்த பின்னர் இருவரும் இணைந்த மெகா புரோஜக்டாக வலிமை உருப்பெற்றது. போனி கபூரின் தயாரில் வலுவாக உருவான வலிமை படத்தின் அப்டேட்டுக்காக ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்த ரசிகர்கள் இடையில் வலிமை அப்டேட்டுகளை கேட்டு ட்ரெண்ட் ஆக்கினர். 

ஒரு கட்டத்தில் அஜித்தே தானும் தயாரிப்பாளரும் ஒருங்கிணைந்து வலிமை ரிலீஸ் தொடர்பாக தீர்மானிப்போம் என்றும் அதுவரை ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

போனி கபூரோ, அஜித்தின் பிறந்த நாளான மே -1ஆம் தேதி முதல் வலிமை படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடைபெறும் என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் தான் தற்போது வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக இணையதளங்களில் காட்டுத்தீ போல தகவல்கள் பரவிவர, பலரும் இதனை மறுத்துவருகின்றனர். எனினும் ஓடிடியில் வலிமை படம் ரிலீஸ் ஆகிறது எனும் ஒரு தகவல் ட்ரெண்ட் ஆகிவருகிறது. 

ஆனால் தல அஜித்தின் தரப்பு “இதற்கு வாய்ப்பே இல்லை” என வலிமை படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தகவலை மறுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் படக்குழுவினர் தான் வலிமை ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை அறிவிக்கும். அதுவரை நிச்சயம் ரசிகர்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும். 

From around the web

Trending Videos

Tamilnadu News