×

தல அஜீத்துடன் இப்படிகூட நடிக்க தயார் - யாஷிகா

ஜீவா, காஜல் அகர்வால் இணைந்து நடித்து வெளிவந்த கவலை வேண்டாம் படத்தில் அறிமுக நடிகையாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
 

இதன்பின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மிக பெரிய வெற்றியடைந்த படம் துருவங்கள் பதினாறில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை யாஷிகா.

இப்படத்திற்கு பிறகு இவருக்கு பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் அமையவில்லை என்று தான் கூறவேண்டும்.

இதனால் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார்.

பிக் பாஸிற்கு பிறகு கூட இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நடிகர் மஹதுடன் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், பேசிய போது "எனக்கு தல அஜித் தான் பிடிக்கும். அவருடன் எப்படியாது ஒரு படம் நடித்து விட வேண்டும், அது தான் என் வாழ்நாள் ஆசை. அவரின் படத்தில் ஒரு background ஆர்டிஸ்டாக கூட நான் நடிக்க தயார்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News