×

தெறியின் சாதனையை முறியடிக்குமா தளபதி 65? எதிர்பார்க்கும் ரசிகர்கள்...

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய சாதனைகள் படைத்து வருகிறது.

 
thalapathy65_a552021

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய சாதனைகள் படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெறி.

இப்படம் பிளாக் பஸ்டர் ஆனதை தொடர்ந்து விஜய்-அட்லீ கூட்டணியில் மெர்சல், பிகில் என வெற்றிப்படங்களாக கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் தெறி படத்தில் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்குமார் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

மேலும் தற்போது ஹீனா மீனா டிக்கா மற்றும் என் ஜீவன் உள்ளிட்ட பாடல்கள் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது வேறு எந்த தமிழ் திரைப்படமும் செய்த சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே போன்று தளபதி 65 படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நம்பப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். தெறி படத்தின் சாதனையை தளபதி 65 முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News