Categories: Cinema News latest news

ரஜினிக்கு குறுக்கே வந்த நடிகர்!. தலைவர் 170 டைட்டிலை கூட சொல்ல முடியலயே!. இது என்னடா சோதனை!…

நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வசூலில் சக்கை போட்டு போட்டு வருகிறது. படம் வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், ரூ.375.40 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக அப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயிலர் படம் வெளியாவதற்கு முதல்நாளே ரஜினி இமயமலை புறப்பட்டு சென்றார். இப்போதும் அங்குதான் இருக்கிறார். ஜெயிலர் படத்தின் வெற்றி அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஜெயிலர் படம் வெளியான உடனே தனது அடுத்த படத்தில் நடிக்க ரஜினி தயாராகத்தான் இருந்தார். அது ரஜினியின் 170வது படமாகும்.

இதையும் படிங்க: மறுபடியும் ஏமாற்றிய அஜித்!.. விடாமுயற்சிக்கு இன்றும் விடிவு காலம் இல்லையாம்!.. காண்டான ரசிகர்கள்!..

ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் அப்படத்தை இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. லைக்கா நிறுவனம் இப்போது லால் சலாம் மற்றும் விடாமுயற்சி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. விடாமுயற்சி இன்னமும் டேக் ஆப் ஆகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு எப்பொதும் துவங்கும் என்பதும் தெரியவில்லை.

ஒருபக்கம், பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் லைக்கா நிறுவனம் தலைவர் 170 படத்தை தள்ளிபோட்டுள்ளது. பொதுவாக ஒரு ஹீரோவின் படம் சூப்பர் ஹிட் அடித்தால் உடனே அடுத்த பட வேலைகளை துவங்கிவிடுவார்கள். ஆனால், இந்த படத்திற்கு எதிர்மாறாக நடந்துள்ளது.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் பக்கத்துல விக்ரம்!.. அதுவும் புது கெட்டப்!.. ஒருவேளை ரோலக்ஸுக்கு ரிவீட் இருக்குமோ?..

இந்த படத்திற்கு வேட்டையன் என தலைப்பு வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சந்திரமுகி படத்தில் ரஜினி ஏற்ற கதாபாத்திரம் அது. எனவே, ரஜினிக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு அது. ஜெயிலர் வெளியாகி ஹிட் அடித்தவுடன் வேட்டையன் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட திட்டமிட்டனர்.

ஆனால், சந்திரமுகி 2 விரைவில் வெளியாகவுள்ளதால் இப்போதைக்கு வேட்டையன் தலைப்பை சொல்ல வேண்டாம். அது அப்படத்தின் புரமோஷனை பாதிக்கும் என ரஜினியே சொல்லிவிட்டாராம். சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. ஆனாலும், வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அஜித் சார ஒருமணி நேரம் வெயிட் பண்ண வச்சு நான் பட்டபாடு! படப்பிடிப்பில் பதறிப்போய் ஓடிய நடிகர்

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா