ரஜினியின் 'தலைவர் 173' டிராப்பான வருத்தத்தில் இருந்த சிபி... அடுத்து விக்ரமுடன் கூட்டணி அமைக்கப்போகிறாரா?
முதல் படமே சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து 'டான்' என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் தான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. இவர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் நானியை வைத்து பண்ணப்போகிறார், மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்தே பண்ணப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தது.
டக்கென 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'தலைவர் 173' படத்தை சிபி சக்கரவர்த்தி தான் பண்ணப்போகிறார் என இந்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.
இதற்கான அடுத்தக்கட்ட வேலைகளும் படப்பிடிப்பை நோக்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கையில், இதன் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக படித்த ரஜினி, இந்த கதைக்கான ஷூட்டிங்கே அதிக கால அவகாசம் எடுக்கும் என்பதை புரிந்து கொண்டு, இதை பண்ண வேண்டாம் என்று சொல்லி விட்டார். அதோடு நிற்காமல், அவர் அடுத்து அஸ்வத் மாரிமுத்துவிடம் கைகோர்த்து 'தர்மன்'-ஐ துவங்கி விட்டார்.
சிபி சக்கரவர்த்தியோ தனது இரண்டாவது படம், அதுவும் தலைவருடனான படம் இப்படியாகி விட்டதே என வருத்தத்தில் இருந்தார். தற்போது, வருத்தத்தில் இருந்து மீண்டு வந்த சிபி அடுத்ததாக பிரபல நடிகர் 'சீயான்' விக்ரமிடம் கதை சொல்ல அவரிடம் appointment வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
