Thalaivar 173 Update: சாண்டி மாஸ்டர் டான்ஸோடு தொடங்கும் தலைவர் 173
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 173. படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தலைவர் 17 அறிவிக்கப்பட்ட போது, படத்தினை சுந்தர் சி தான் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரபூர்வ வீடியோவும் வெளிவந்தது. இதனை கண்ட ரசிகர்கள் உற்சகமாயினர். காரணம் தொடர்ந்து ரஜினி அதிரடியான படங்களிலேயே நடித்து வருவதால் சுந்தர் .சி படம் நிச்சயம் ஜனரஞ்சகமான படமாக இக்கும் என்று எண்ணினர். ஆனால் என்ன நடந்ததோ திடீரென ரஜினி படத்திலிருந்து விலகினார்.
சுந்தர் சி விலகியதைத் தொடர்ந்து, டான் வெற்றி பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இந்த ப்ராஜெக்டுக்குள் நுழைந்தார். Every HERO has a FAMILY என்ற டேக்லைனுடன் இதற்கான அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவும் வெளியாகியது. ஆனால் திரைகதையில் திருப்தி இல்லாத ரஜினி அவரையும் திடீரென நிராகரித்தார்.

தற்போது இறுதியாக, ஓ மை கடவுளே மற்றும் டிராகன் படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தலைவர் 173 படத்தை இயக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து பகிர்ந்து வீடியோ வெளியிட்டபோதே இந்த கூட்டணி உறுதியானது.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாத பிற்பகுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பமே சாண்டி மாஸ்டரின் மரண மாஸ் நடன அமைப்பில் ரஜினிகாந்துக்கான ஒரு பிரம்மாண்ட ஓப்பனிங் பாடலுடன் ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த இந்த படம், ரசிகர்களுக்கு ஒரு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், இப்படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளன.
