Connect with us
thalaivi-movie

latest news

ஓடாத படத்திற்கு எதற்காக இரண்டாம் பாகம்?-கிண்டலடிக்கும் நெட்டீசன்கள்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவான படம் ‘தலைவி’. இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இவர் அஜித் நடித்த கிரீடம் படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதையடுத்து மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தலைவா, தேவி உட்பட பல படங்களை இயக்கியிருந்தார். கொரோனா இரண்டாம் அலைக்குப்பின் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் இந்த மாத தொடக்கத்தில் 50% இருக்கைகளுடன் திறக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ‘தலைவி’ படம் தியேட்டரில் வெளியானது. தனி ஒரு பெண்ணாக தமிழ் சினிமாவிலும், தமிழக அரசியலிலும் ஆளுமை செய்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

thalavi-stills

இப்படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும், ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளனர். கங்கனா ரனாவத் ஏற்கனவே தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பின் இப்படம்மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்கான வசூலும் மிக குறைந்த அளவிலே வந்துள்ளதாம். ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதோடு முடிவதாக உருவாகியுள்ளதாம் தலைவி படம். எனவே இப்படத்தின் இரண்டாம் பாகம் வர உள்ளதாம்.

இப்படத்தின் ஹிந்தி பதிப்பில் பணியாற்றிய ரஜித் அரோரா என்பவர், ஜெயலலிதா அரசியலில் சந்தித்த வெற்றி, தோல்விகள். அவர் சந்தித்த போராட்டங்களை பற்றி தலைவி 2ல் சொல்லப்போகிறோம். கங்கானாவிடம் இதற்காக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அவர் ஓகே என கூறினால் விரைவில் பணிகள் தொடங்கும் என கூறியுள்ளார்.

முத்ல் பாகமே ஓடவில்லை அதுமட்ட்டுமல்லாமல் மிக குறைந்த வசூலையே பெற்றது. அப்படி இருக்க ஓடாத படத்திற்கு எதற்காக இரண்டாம் பாகம் என்று சமூகவலைதலைங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

author avatar
adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top