×

அந்தரத்தில் தொங்கும் ‘தலைவி’...ரிலீஸ் ஆவதில் சிக்கல்....

தலைவி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
 
thalaivi
ஹைலைட்:
தியேட்டரிலும் ரிலீஸ் செய்ய முடியாமல், ஓடிடியிலும் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறாராம் அப்பட தயாரிப்பாளர்

இயக்குனர் விஜய் இயக்கியுள்ள திரைப்படம் தலைவி. இப்படம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டது. இப்படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்தும் ,எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர்.  இப்படம் முடிந்து வருகிற செப்டம்பர் 10ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், 2 வாரங்கள் கழித்து அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிடவும் ஒப்பந்தம் போடப்பட்டது.

thalaivi movie

ஆனால், இப்படம் தியேட்டரில் வெளியாகி 2 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியிடுவதாக இருந்தால் இந்த படத்தை வாங்க மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் மறுத்துவிட்டனராம். எனவே, படம் வெளியாகி 4 வாரங்கள் கழித்து நீங்கள் வெளியிடுங்கள் என அமேசான் பிரைமிடம் தலைவி பட தயாரிப்பாளர் கோரிக்கை வைக்க அவர்கள் அதை ஏற்கவில்லை. 

thalaivi

எனவே, தியேட்டரிலும் ரிலீஸ் செய்ய முடியாமல், ஓடிடியிலும் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறாராம் அப்பட தயாரிப்பாளர். எனவே, திட்டமிட்டபடி இப்படம் செப் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகாது என செய்திகள் வெளிவந்துள்ளது..

From around the web

Trending Videos

Tamilnadu News