×

தளபதி 65 படத்தில் மூன்று ஹீரோயின்களா... வெளியான புதுத் தகவல்

மாஸ்டர் வெற்றிக்குப் பின்னர் டாக்டர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் தளபதி 65 படத்தில் நடிக்கிறார். 
 
தளபதி 65 படத்தில் மூன்று ஹீரோயின்களா... வெளியான புதுத் தகவல்

சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கும் இந்தப் படத்துக்கான போட்டோஷூட் முடிந்திருக்கும் நிலையில், ஷூட்டிங் விரைவில் ரஷ்யாவில் தொடங்க இருக்கிறது. இதற்காக ஏற்கனவே ரஷ்யா போய் ஷூட்டிங் ஸ்பாட்டுகளை இறுதி செய்துவிட்டு வந்திருக்கிறார் நெல்சன். 

படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் முகமூடி படத்துக்குப் பின்னர் 8 ஆண்டுகள் கழித்து நடிக்கிறார் பூஜா ஹெக்டே. இந்தநிலையில், படத்தில் இன்னொரு நாயகி இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. 

இரண்டாவது நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்கிறார்கள். அதேபோல், விஜய் சேதுபதியின் கருப்பன் பட நாயகி தன்யா ரவிச்சந்திரனும் தளபதி 65 படத்தில் முக்கியமான ரோலில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News