Categories: Cinema News latest news

தயாரிப்பாளருக்கு கட்டளையிட்ட விஜய்.! சென்னையில் தீவிர பணியில் படக்குழு.!

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு, அடுத்தப்படத்திற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். மார்ச் மாதம் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

இந்த படத்தை தெலுங்கு முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்திற்கான ஷூட்டிங்காக ஹைதிராபாத்தில் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடத்தில் செட் அமைக்க படக்குழு முயற்சித்ததாம்.

 

இதையும் படியுங்களேன் –முதன் முறையாக ரஜினியை ஃபாலோ செய்யும் கமல்.! அடுத்த படத்தில் ரெம்ப பழைய யுக்தி.!

படத்தின் கதைப்படி அது ஒரு குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதால் பிரமாண்ட வீடு செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற இருந்ததாம். ஆனால், அங்கு நீண்ட நாட்கள் ஷூட் செய்ய வேண்டும் என்பதால்,

அந்த செட்டை சென்னையிலேயே போட்டு விடுங்கள் என விஜய் , தயாரிப்பாளருக்கு அன்பு கட்டளையிட்டு விட்டாராம். ஏனென்றால் நீண்ட நாட்கள் குடும்பத்தை பிரிந்தது போல இருக்கும் அதனால், சென்னை என்றால் வீட்டில் இருந்து புறப்பட்டு ஷூட்டிங் ஸ்பாட் சென்று விடலாம் என்பதால் இந்த யோசனையாம்.

விஜயின் அறிவுறுத்தலின் படி, தற்போது சென்னையில் செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் அது முடிந்ததும் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan