Categories: Cinema News latest news

விஜய்க்கு எங்கயோ மச்சம்தான்!….ரசிகர்களை குஷிப்படுத்தும் தளபதி 66 அப்டேட்….

விஜயின் பீஸ்ட் பட வேலைகள் ஓரளவுக்கு முடிந்த விட்ட நிலையில் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் படத்தை எதிர்பார்ககலாம் என படக்குழுவினர் கூறிவருகின்றனர். மேலும் படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகி கொண்டே வருகின்றன.

இந்த நிலையில் விஜயின் தளபதி 66 படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் வம்சி படிபள்ளி படத்தின் இயக்குனர் திலீப் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். பிரகாஷ்ராஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனெவே பிரகாஷ்ராஜ் மற்றும் விஜய் காம்போ மக்கள் மத்தியில் வெற்றி பெற்ற இணையாகும்.

இந்த் நிலையில் எல்லாரும் எதிர்பாக்கிற ஒன்னு என்னவென்றால் விஜயுடன் ஜோடி சேர்வது யார் என்பது தான். வாரத்திற்கு ஒரு நடிகையின் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் பட்டாசு படத்தில் நடித்த மெஹ்ரின் தான் ஜோடி சேர்வார் என எதிர்பபார்க்கபடுகிறது.

மேலும் விஜயுடன் திரிஷாவையும் இணைக்கலாம் என படக் குழுவினர் பேசி வருகின்றனர். விஜய் படத்திற்காக முதன் முறையாக தமன் அவர்கள் இசையமமைக்க உள்ளார். ரசிகர்களை மகிழ்ச்ச்சி படுத்த விஜயின் அப்டேட்ஸ் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini