Categories: Cinema News latest news

தளபதி 67… LCU  கன்ஃபார்ம்?? ஆனா அங்கதான் ஒரு குழப்பமே… என்ன பிரச்சனை தெரியுமா??

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் “தளபதி 67” திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய பலரும் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy67

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய “மாஸ்டர்” திரைப்படம் வேற லெவலில் ஹிட் ஆன நிலையில் “தளபதி 67” திரைப்படத்திற்கு எக்ஸ்பெக்டேஷன் எகிறி வருகிறது. அதே போல் லோகேஷ் கனகராஜ்ஜின் முந்தைய திரைப்படமான “விக்ரம்” திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான வெற்றித் திரைப்படமாக அமைந்தது. ஆதலால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Kaithi

“விக்ரம்” திரைப்படத்தில் லோகேஷின் முந்தைய படமான “கைதி” திரைப்படத்தின் தொடர்ச்சியாக சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆதலால் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் பாணியில் “லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்” என்ற ஒன்றை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் இனி வரும் திரைப்படங்களில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போன்ற திரைக்கதைகளை அமைக்கவுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதன்படி “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்திற்காகவே ஒரு தனி திரைப்படத்தையும் “விக்ரம் 2” திரைப்படத்தையும் லோகேஷ் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

Vikram

இதனிடையே “தளபதி 67” திரைப்படமும் லோகேஷ் கனகராஜ்ஜின் யுனிவர்ஸுக்குள் வருமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் தற்போது இது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது “தளபதி 67” திரைப்படத்தை லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் வருவது போன்றுதான் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதில் லோகேஷ் கனகராஜ் ஒரு குழப்பத்தில் இருக்கிறாராம்.

அதாவது “தளபதி 67” திரைப்படத்தில்  லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்கான விஷயங்களை காட்சிகளின் மூலம் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமா? அல்லது வசனங்களின் மூலம் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமா? என்று யோசித்து வருகிறாராம்.

இதையும் படிங்க: தேவா இசையமைத்த இந்த ஹிட் பாடலுக்கு வைரமுத்துவால் வந்த பிரச்சனை… இப்படியெல்லாம் நடந்திருக்கா??

Lokesh Kanagaraj

அது மட்டுமல்லாது சினிமாட்டிக் யுனிவர்ஸின் படி லோகேஷின் முந்தைய திரைப்படங்களில் நடித்த கமல் ஹாசன், கார்த்தி, சூர்யா ஆகியோரை “தளபதி 67” திரைப்படத்தில் கொண்டு வருவதற்கு பல சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் “தளபதி 67” திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் வருவதாக வெளிவந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Arun Prasad
Published by
Arun Prasad