Categories: Cinema News latest news

நாங்கலாம் வேற மாதிரி!.. தளபதி-67 பூஜை புகைப்படங்களை வெளியிடாததற்கு இது தான் காரணமா?..

ஒரு வழியாக வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு தனது அடுத்த படமான தளபதி – 67 படத்திற்கான பூஜையை கடந்த 5 ஆம் தேதி நடத்தினார்கள். அதில் லோகேஷ், நடிகர் விஜய், நடிகர் அர்ஜூன் போன்ற சிலர் கலந்து கொண்டதாக தெரிகிறது.

vijay

ரசிகர்களுக்கு அர்ஜூன் வருகையால் படத்தில் விஷால் நடிப்பது பற்றி சந்தேகம் எழுந்திருக்கின்றது. மேலும் 5 ஆம் தேதி ரசிகர்கள் அனைவரும் இணையத்தையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் தளபதி – 67 படத்தின் பூஜை சம்பந்தமான புகைப்படங்கள் கண்டிப்பாக பகிர்வார்கள் என்று காத்துக் கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க : என் முதல் பட சம்பளம் இவ்வளவு தான்… அதில் என் கைக்கு இவ்வளவு தான் வந்தது…. லோகேஷ் கனகராஜ் சொன்ன சூப்பர் தகவல்

vijay lokesh

ஆனால் எதிர்ப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தது படக்குழு. இன்று வரை ஒரு புகைப்படம் கூட வரவில்லை. இதன் பின்னனியின் விஜய் கூட காரணமாக இருக்கலாம். அவர் தான் புகைப்படம் பகிர வேண்டாம் என கூறியிருப்பார் என்ற ஒரு தகவல் பரவியது.

vijay lokesh

ஆனால் உண்மையான காரணம் என்னெவெனில் ஏற்கெனவே வாரிசு படத்தின் புரோமோஷனுக்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கும் சமயத்தில் தளபதி – 67 படபூஜை சம்பந்தமான புகைப்படங்கள் வெளிவந்தால் அது வாரிசு படத்தின் புரோமோஷனை பாதிக்கும் என்று கருதியே இந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini