Categories: Cinema News latest news

தளபதி 67 படத்தில் விஷால் நடிக்காததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?… என்னப்பா சொல்றீங்க!

“தளபதி 67” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

Thalapathy 67

சில மாதங்களுக்கு முன்பு “தளபதி 67” திரைப்படத்தில் விஷாலை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன. மேலும் விஷால் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஒரு தகவல் வெளிவந்தது.

ஆனால் அதன் பின் விஷால் “தளபதி 67” திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாகவே கூறப்பட்டது. இந்த நிலையில் விஷால் “தளபதி 67” திரைப்படத்தில் நடிக்காததற்கான காரணம் குறித்து ஒரு சூடான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Vishal

அதாவது லோகேஷ் கனகராஜ், “தளபதி 67” திரைப்படத்திற்காக விஷாலை அணுகியபோது விஷால் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இதனால் லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் ஹேப்பியாம்.

Thalapathy 67

ஆனால் “தளபதி 67” திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார், விஷாலுக்கு “நோ” சொல்லிவிட்டாராம். அதாவது விஷால் சமீப காலமாக நடித்த எந்த திரைப்படங்களுக்கும் சரியான ஒத்துழைப்பு கொடுத்ததில்லையாம். சரியாக ஷூட்டிங்கிற்கும் வந்ததில்லையாம்.

ஒருவேளை “தளபதி 67” திரைப்படத்தில் விஷாலை ஒப்பந்தம் செய்து, அந்த படத்திலும் விஷால் வழக்கம்போல அப்படி நடந்துகொண்டால் ஷூட்டிங் மொத்தமும் பாதித்துவிடும், ஆதலால் விஷால் வேண்டாம் என தயாரிப்பாளர் லலித் கூறிவிட்டாராம். இத்தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அன்னைக்கு மட்டும் கண்ணதாசன் சொன்னதை கேட்டிருந்தா சாவித்திரிக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா??

Arun Prasad
Published by
Arun Prasad