Categories: Cinema News latest news

தளபதி 68 பூஜை வீடியோ ரிலீஸ்!.. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா என காஸ்டிங்கே கலர்ஃபுல்லா இருக்கே!

அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ வெளியானது.

தளபதி 68 படமும் மல்டி ஸ்டாரர் படமாக உருவாக உள்ளது. முதல் முறையாக நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம் மற்றும் அஜ்மல் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் நடிச்சிருந்தா அந்த படம் ஓடியிருக்காது!.. பல வருடம் கழித்து லிங்குசாமி சொன்ன ரகசியம்…

மேலும், விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் மீனாக்‌ஷி சவுத்ரி, சினேகா நடிக்க உள்ளதாகவும் லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், காமெடிக்கு யோகி பாபு மற்றும் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் மற்றும் சென்னை 28 கேங் என ஒட்டுமொத்த பேரும் இந்த படத்தில் ஆன்போர்ட் ஆகியுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் பூஜை வீடியோவிலேயே அறிவித்து மாஸ் காட்டி உள்ளது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் துரோகம் செஞ்சதா சொன்ன டி. இமான்.. இப்போ அடுத்து யாருடன் கைகோர்த்துள்ளார் தெரியுமா?..

நடிகர் விஜய் வெறித்தனமாக ஒரு ஆக்‌ஷன் படத்தையும் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் கொண்டாட ஒரு ஃபேமிலி படத்தையும் கடந்த பல வருடங்களாக மாற்றி மாற்றி கொடுத்து வருகிறார்.

மங்காத்தா, மாநாடு போல தளபதி 68 படம் இருக்குமா? அல்லது வாரிசு படத்தை போல ஜாலியான ஃபேமிலி டிராமாவாக தளபதி 68 இருக்குமா? என ரசிகர்கள் ஒரே குழப்பமாகி உள்ளனர்.

மேலும், சமீபத்தில் இந்த படத்துக்காக லாஸ் வீகாஸுக்கு எல்லாம் சென்று டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை எல்லாம் அமல்படுத்த போவதாக அறிவித்த நிலையில், எந்த மாதிரியான படமாக இருக்கும் என்றே கெஸ் செய்ய முடியவில்லை என்கின்றனர். ஆனால், கண்டிப்பாக வெங்கட் பிரபுவின் ட்விஸ்ட் அண்ட் டச் இருக்கும் என்பது தெரிகிறது.

 

Saranya M
Published by
Saranya M