அடுத்த குருவி, சுறாவா? ஒரு தடவ பட்டும் புரியலயே.. வெளியான தளபதி 69 பட அப்டேட்

by Rohini |
thalapathy69
X

அந்தப் படத்தின் ரீமேக்கா? : சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷ் தெலுங்கில் சக்க போடு போட்ட பகவந்த் கேசரி திரைப்படத்தை விஜய் ஐந்து முறை பார்த்தார் என்றும் அந்தப் படத்தின் ரீமேக்கை தமிழில் எடுக்க முடியுமா என அந்த படத்தின் இயக்குனரிடம் கேட்டதாகவும் ஒரு மேடையில் பேசினார். அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இதற்குப் பின்னணியில் என்ன காரணம்? ஒருவேளை அந்த படத்தின் ரீமேக் தான் தளபதி 69 படத்தின் கதையா என்றும் நெட்டிசன்கள் துருவ ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கனவே தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியானதுமே இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் என ஒரு பேச்சு அடிபட்டது. உண்மையில் அப்படி என்னதான் நடந்தது என வலை பேச்சு பிஸ்மி தெளிவாக கூறியுள்ளார். தன்னுடைய கடைசி படம் மக்களுக்கு ஒரு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்வதாகவும் ஒரு நல்ல வெற்றியுடன் அமைய வேண்டும் என்றும் விஜய் நினைத்தார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போது தான் பாலையா நடித்த பகவந்த் கேசரி திரைப்படமும் வெளியானது.

எச்.வினோத் நுழைந்தது எப்படி? ; அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அப்போது விஜய் பகவந்த் கேசரி இயக்குனரிடம் இந்த படத்தின் ரீமேக்கை தமிழில் எடுக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இயக்குனர் ரீமேக்கில் தனக்கு ஆர்வம் இல்லை வேண்டுமென்றால் பிரெஷான ஒரு கதையை தயார் செய்கிறேன் எனக் கூறினாராம். அதற்கு விஜய் சம்மதம் தெரிவிக்க பகவந்த் கேசரி படத்தின் இயக்குனர் ஒரு புதிய கதையுடன் வந்திருக்கிறார். ஆனால் அந்த கதை விஜய்க்கு திருப்தியாக இல்லையாம். அதன் பிறகு தான் எச் வினோத் இந்த படத்திற்குள் நுழைந்து இருக்கிறார்.

இருந்தாலும் பகவந்த் கேசரி படத்தின் முழு ரீமேக் இல்லை என்றாலும் ஒரு சில காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாக சொல்கிறார்களே அது உண்மையா என கேட்டதற்கு அதற்கும் பிஸ்மி விஜயின் தரப்பிடம் இதைப் பற்றி கேட்டபோது முழு நீள ரீமேக் படம் இல்லை. சில காட்சிகள் மட்டும் இதில் இருக்கும் என்றவாறு கூறியிருந்தார்களாம். அதன் பிறகு பயனூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க அந்தப் படத்தில் இருக்கும் ஒரு முக்கிய நண்பர் ஒருவர் பிஸ்மியிடம் பகவத் கேசரி படத்தின் ஓபனிங் சீனில் பிரமாண்ட அளவில் ஒரு காட்சிக்காக செட் போடப்பட்டிருக்கும்.


ஒரே மாதிரியான செட்: அதே மாதிரி செட் தளபதி 69 படத்திலும் போட்டிருக்கிறார்கள். அங்கு ஸ்ரீலிலாவை வில்லன் குரூப் கடத்திக் கொண்டு போக பாலையா லாரி ஓட்டியவாறு பறந்து வந்து அடித்து ஸ்ரீலீலாவை காப்பாற்றுவார். அதைப்போல இங்கு ஸ்ரீலீலா பாத்திரத்தில் மமீதா பைஜு. இவரை ஒரு வில்லன் குரூப் கடத்திக்கொண்டு போக விஜய் பைக்கில் பறந்து வந்து அடிப்பதாக படமாக்கப்பட்டிருக்கிறதாம்.

இதைக் கேட்டதுமே பிஸ்மிக்கு இது கண்டிப்பாக பகவத் கேசரி படத்தின் முழு ரீமேக் தான் என தெரிந்ததாம். அது மட்டுமல்ல பாலையாக படங்களை அப்படியே தமிழில் ரீமேக் செய்யும் பட்சத்தில் அது விஜய்க்கு பின்னடைவாக தான் இருக்கும். இங்கு அதைக் கேலிக்கூத்தாக தான் பார்ப்பார்கள். ஏற்கனவே ஒரு சூறா, குருவி படங்கள் வந்து எந்த அளவுக்கு ட்ரோல் செய்யப்பட்டன என அனைவருக்கும் தெரியும். அந்த வரிசையில் இந்த படமும் அமைந்து விடாமல் இருந்தால் சரிதான் என பிஸ்மி கூறி இருக்கிறார்.

Next Story