இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, சம்யுக்தா, சங்கீதா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இதையும் படியுங்களேன்- பகத் பாசில் கதாபாத்திரம் முதலில் தனுஷுக்கு எழுதப்பட்டதாம்.! சீக்ரெட் கூறிய ‘விக்ரம்’ அமர்.!
ஏற்கனவே இவ்வளவு நட்சத்திர பட்டாளங்கள் இருக்கும் நிலையில், மேலும் ஒரு பிரபலம் இந்த படத்தில் நடிக்கும் நிலையில், மேலும் ஒரு பிரபல இயக்குனரும் நடிகரும் வாரிசு படத்தில் இணைந்துள்ளாராம்.
அவர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவில் தற்போது வில்லன், ஹீரோ என இரண்டு கதாபாத்திரத்தின்களிலும் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா தான். இவர் வாரிசு படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் விஜய்யுடன், எஸ்,ஜே.சூர்யா நான்காவது முறையாக இணைந்து பணியாற்ற போகிறார். இதற்கு முன்பு விஜய்யை வைத்து எஸ்.ஜே.சூர்யா ‘குஷி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை, தொடர்ந்து விஜய் நடித்த நண்பன், மெர்சல் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். இந்நிலையில், ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன், எஸ்.ஜே.சூர்யா இணையயப் போவதாக வெளிவந்த செய்தி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று எஸ்.ஜே சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…