Connect with us

Cinema News

விட்டிருந்தா அப்பயே செத்துருப்பேன்..- தளபதி தினேஷ்க்கு நடக்கவிருந்த விபரீதம்!.

தமிழ் சினிமாவில் திரையில் பல கதாநாயகர்களை நாம் பார்த்தாலும் நிஜ உலகில் ஸ்டண்ட் மாஸ்டர்களும், டூப் போடுபவர்களுமே நிஜ கதாநாயகர்கள் என கூறலாம். அந்த அளவிற்கு எந்த ஒரு காட்சியிலும் பயப்படாமல் சாகசம் செய்பவர்கள்தான் ஸ்டண்ட் மாஸ்டர்கல்.

கத்தி மேலே நடப்பது போன்றதுதான் இவர்களது பணி. பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஸ்டண்ட் மேன்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களை செய்து தருவதில்லை. இதனால் பல திரைப்பட படப்பிடிப்புகளில் அசாம்பாவிதமாக உயிரிழப்புகள் அல்லது விபத்துகள் ஏற்படுகின்றன.

தமிழ் சினிமாவில் வெகு காலமாக ஸ்டண்ட் மாஸ்டராக இருந்துவரும் நடிகர் தளபதி தினேஷ்க்கும் கூட அப்படியான சம்பவம் நடந்துள்ளது. ஒரு மலையாள திரைப்படத்தில் கதாநாயகன் மோகன்லாலுடன் சண்டை போடும் காட்சி அப்போது படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.

இரண்டு மாடி வரை மோகன் லாலிடம் சண்டையிட்டு கொண்டே செல்லும் தளபதி தினேஷ், இரண்டாவது மாடிக்கு வந்த பிறகு அங்கிருந்து கீழே சென்றுக்கொண்டிருக்கும் லாரியில் போய் விழ வேண்டும். அந்த லாரியின் பின்பக்கத்தில் மூங்கில்கள் மட்டுமே இருந்தன. மூங்கில்களை எடுத்துவிட்டால் தரைதான் தெரியும். லாரிக்கு பாடி கிடையாது.

லாரியில் நடந்த சம்பவம்:

இந்த நிலையில் மோகன்லாலிடம் அடி வாங்கி கொண்டே அதே சமயம் லாரி வருகிறதா? என்றும் பார்த்துக்கொண்டே தளபதி தினேஷ் சமாளித்துக்கொண்டிருக்க லாரி சரியான சமயத்தில் வந்தது. திட்டமிட்டபடி தினேஷும் லாரியில் குதித்தார்.

ஆனால் மூங்கில்களில் விழுந்தவர். அப்படியே மூங்கிலுக்கு அடியில் சென்றுவிட்டார். லாரியில் பாடி இல்லை என்பதால் லாரிக்கு கீழே தரையில் விழுந்துவிட்டார். அதை அறியாத லாரி ட்ரைவர் வேகமாக லாரியை ஓட்டிக்கொண்டு போக நல்ல வேளையாக அங்கே இருந்த மேனஜர் உடனே சுதார்த்து வண்டியை நிறுத்தினார்.

அன்று மட்டும் அவர் வண்டியை நிறுத்தவில்லை எனில் அன்றே இறந்திருப்பேன் என பேட்டியில் கூறியுள்ளார் தளபதி தினேஷ்.

இதையும் படிங்க: பாத்ததும் காதலில் விழுந்த மணிவண்ணன்!.. தாடிக்கு பின்னாடி இப்படி ஒரு ரொமான்ஸ்!…

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top