தளபதி விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தளபதி தற்போது நடித்து வரும் அவரது 66வது திரைப்படம் பற்றி மட்டுமே தகவல் வெளியாகியது. வம்சி இயக்கி வரும் அந்த படத்திற்கு வாரிசு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் தளபதி விஜய் நடிப்பார் என கூறப்பட்டு வருகிறது. ஏறக்குறைய அதுதான் உண்மையும் கூட. தயாரிப்பு நிறுவனம் மட்டும் இன்னும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது.
இதையும் படியுங்களேன் – செல்வராகவனின் முன்னாள் மனைவியை கரம்பிடித்த எஸ்.பி.பி.சரண்.?! பதறிப்போய் அவரே வெளியிட்ட ஆதாரம்….
இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி கடந்த ஜனவரி மாதமே தளபதி விஜயை சந்தித்து ஒரு கதை கூறினாராம். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆக போய் கொண்டிருக்கிறது. இன்னும் தளபதி 67 படம் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
ஒரு வேளை ஆர்.ஜே.பாலாஜி கூறிய கதை ஓகே ஆகி தளபதி 67 இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன ஆகும் என சிலர் கூறி வருகின்றனர். ஆனால், அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…