×

ஜார்ஜியாவில் விஜய்... மாஸாக துவங்கிய தளபதி படப்பிடிப்பு... தீயாய் பரவும் புகைப்படம்....      

 
ஜார்ஜியாவில் விஜய்... மாஸாக துவங்கிய தளபதி படப்பிடிப்பு... தீயாய் பரவும் புகைப்படம்....

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் துவங்கியுள்ளது. தளபதி 65 என அழைக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.  இப்படத்தை சன் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே, திட்டமிட்டதை விட விரைவாக படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜார்ஜியாவில் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், ஜார்ஜியாவில் நெல்சனும், விஜயும் படப்பிடிப்பில் நின்று பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.



 

From around the web

Trending Videos

Tamilnadu News