Categories: Cinema News latest news

தமன் உடம்புல இப்படி பிரச்சனை இருக்கா?!… இது என்ன புதுசா இருக்கு!

தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் தெலுங்கில் பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர், ரவிதேஜா, மகேஷ் பாபு போன்ற டாப் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் குறிப்பிட்ட சில திரைப்படங்ளுக்கு இசையமைத்திருந்தாலும் “ஒஸ்தி”, “வாரிசு” போன்ற திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மெஹா ஹிட் ஆனது. தற்போது ஷங்கர் இயக்கி வரும் “கேம் சேஞ்சர்” திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

“வாரிசு” திரைப்படத்தில் இடம்ம்பெற்ற “ரஞ்சிதமே”, “ஜிமிக்கி பொண்ணு” ஆகிய பாடல்கள் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட பாடல்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தமன், தனது உடலில் இருக்கும் ஒரு பிரச்சனையை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது தமனுக்கு எப்போதும் காதுகள் சூடாகவே இருக்குமாம். “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றபோது அவர் அடிக்கடி ஈரத்துணியை காதில் வைத்துக்கொண்டே இருந்தாராம்.

எங்காவது வெளியே போய்விட்டு வீட்டிற்கு கிளம்பும்போது வீட்டில் இருக்கும் மனைவிக்கு தொடர்புகொண்டு ஏசியை ஆன் செய்து வைக்குமாறு கூறுவாராம். அவர் வீட்டிற்குள் நுழையும்போதே குளிராக இருக்கவேண்டுமாம். அவ்வாறு ஏசியை ஆன் செய்ய தாமதமாக்கினால் மனைவியை திட்டுவாராம். இவ்வாறு தனது காதுகளுக்கு இப்படி ஒரு விநோதமான பிரச்சனை இருப்பதாக அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி முத்தம் கொடுத்ததால் கோபித்துக்கொண்டு கிளம்பிய ஸ்ருதிஹாசன்…

Arun Prasad
Published by
Arun Prasad