தளபதி விஜய் தற்போது அவரது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் திரைக்கு வரவுள்ளது. இப்பட ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
பட ரிலீசுக்கு இன்னும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் இருப்பதால் படக்குழு அவசரப்படாமல் நிதானமாக சிறப்பாக வேலை செய்து வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஷியாம், பிரபு, சரத்க்குமார் என பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்க ஆரம்பிக்கும் போதே , அனிருத் விஜய்க்கு கொடுத்ததை விட சிறப்பாக இசையை கொடுப்பேன். இது என் வாய்ப்பு என்பது போல சூளுரை விடுத்து இருந்தார்.
இதையும் படியுங்களேன் – அஜித் செய்த வேலையால் H.வினோத் எடுத்த அதிரடி முடிவு.! அங்கிருந்த மொத்த டீமும் எஸ்கேப்.?
தற்போது வெளியான தகவலின் படி, விஜய் நடித்த யூத் திரைப்படத்தில் ஹிட்டான ஆல்தோட்ட பூபதி பாடலை வாரிசு படத்தில் ரீ கிரியேட் செய்ய உள்ளாராம். அப்பாடலில் சிம்ரனுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டிருப்பார் தளபதி விஜய். மீண்டும் அது நடந்தால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்.
சிம்ரன் இன்னும் அப்படியே தான் இருக்கிறார். விஜயும் அப்படியே அதே துள்ளலுடன் தான் இருக்கிறார். ஆதலால் ஒரு பாடலுக்கு நடனமாடினால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என கூறப்பட்டு வருகிறது.
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…