பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3 மாதங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் பலரது மனதையும் கவர்ந்த ஒரு போட்டியாளர் நாடக கலைஞர் தாமரைச்செல்வி தான். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் 98 நாட்கள் வரை இருந்தார்.
கடந்த வாரம் தான் தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனென்றால் தாமரை இறுதிவரை பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பார் என்று பலர் நம்பி இருந்தனர். கடந்த வாரம் தாமரை வெளியேற்றப்படுவதற்கு முன்பதாக 12 லட்சம் ரூபாய் பணத்துடன் சிபி வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால் தாமரை பணமா முக்கியம் எனக் கூறிவிட்டு அந்த பணத்தையும் எடுக்க வில்லை. வீட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்டு விட்டார். இதனால் அவரது ரசிகர்கள் தாமரையின் வெளியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 98 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த தாமரைச்செல்வி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது உங்களுக்கு தெரியுமா?
தாமரையின் ஒரு வார சம்பளம் 70 ஆயிரம் என பேசப்பட்டதாம். அதன்படி 14 வாரங்கள் வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த தாமரைக்கு 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பளத்தில் இருந்து 30% வரி பிடிக்கப்படுமாம். இப்படி பார்க்கையில் தாமரை 12 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறியிருக்கலாம் என அவரது ரசிகர்கள் தங்கள் மனக்குமுறலை கொட்டி வருகின்றனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…