Categories: Cinema News latest news

தங்கலான் வெற்றி வெற்றின்னு சொல்லி யாரை ஏமாத்துற… பயில்வான் காட்டம்

ஞானவேல் ராஜா இயக்கத்தில் பா.ரஞ்சித் இயக்கிய படம் தங்கலான். விக்ரம் முற்றிலும் மாறுபட்ட 3 கெட்டப்புகளில் நடித்துள்ளார். படம் வெளியாகி வெற்றிகமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. விக்ரமுடன் இணைந்து பசுபதி, பார்வதி மேனன், மாளவிகா மோகனன், அரி கிருஷ்ணன், முத்துக்குமார் உள்பட பல் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தங்கச்சுரங்கத்துக்காக ஆங்கிலேயர்கள் பழங்குடியினரின் நிலத்தைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். அவர்களை எதிர்த்து பழங்குடியினர் தலைவர் தங்கலான் போராடுகிறார். இதுதான் கதை. இந்தப் படத்தில் புத்தரின் சிலையை ஆங்காங்கே காட்டியிருப்பார்கள். இது மதம் சார்ந்த சர்ச்சைகளை உண்டுபண்ணியது. 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் நல்ல வசூலைக் குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தின் வசூல் பற்றி நாளுக்கு நாள் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இந்தப் படத்தில் 4 நாள் கலெக்ஷன் 60 கோடியை நெருங்கியதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் படத்தைப் பற்றி பிரபலம் ஒருவர் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

bayilvan

தங்கலான் படம் 4 நாள்ல 30 கோடி தான் வசூல் ஆகி இருக்கு. இது மிகப்பெரிய தோல்வி. புத்தர் மதம், ஜெய்பீம் இதை விளம்பரம் பண்ணதால படத்துக்கு யாரும் வரல. 4 நாள்ல 30 கோடி கலெக்ஷன் பண்ணிப்புட்டு நீ வெற்றி வெற்றின்னு சொல்லி யார ஏமாத்துற? உன் மதத்தை பரப்பணும்னா உன் காசுல எடு. தோல்வி படத்துக்கு சக்சஸ் மீட். நல்லா ஏமாத்துறீங்கன்னு பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தங்கலான் படத்தைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் மட்டும் இப்படி சொல்லி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தப் படத்தில் தான் விக்ரம் இதுவரை நடித்ததிலேயே மிகவும் கஷ்டப்பட்டு நடித்தாராம்.

படம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்பகுதியில் உள்ள பழங்குடியினர்களை வைத்தே சில காட்சிகளையும் எடுத்ததாகச் சொல்கிறார்கள். படத்தின் வெற்றியை திசை திருப்ப இப்படி பயில்வான் போட்டுத் தாக்குகிறாரா என்று தெரியவில்லை.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v