கடைசி நேரத்துல தங்கலான் படத்துக்கு வந்த ஆப்பு?.. செம கடுப்பில் சியான் விக்ரம்!.. என்ன ஆகப்போகுதோ!..

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி தங்கலான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதியை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்து தள்ளி போட்டு வந்த நிலையில், ஒரு வழியாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது.

அடுத்த மாதம் தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 5:00 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பை தற்போது சியான் விக்ரம் வெளியிட்டுள்ளார்.

தங்கலான் படத்துக்கு கடைசி நேர சிக்கலாக பா. ரஞ்சித் நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை பிரச்சனையை கிளப்புமா என்கிற அச்சம் சியான் விக்ரமுக்கு ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கியுள்ளனர்.

சியான் விக்ரம் இது தொடர்பாக பா. ரஞ்சித்திடம் பேசியிருப்பதாகவும், தகவல்கள் கசிந்துள்ளன. வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்பில் இருந்து வரும் சியான் விக்ரம் தங்கலான் படத்தின் புரமோஷனுக்கு விரைவில் நேரத்தை ஒதுக்க ரெடியாகி வருகிறார்.

ஏற்கனவே துருவ நட்சத்திரம் படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் வெளியாகாமல் உள்ள நிலையில், பா. ரஞ்சித்தின் தலித் அரசியல் கருத்து தங்கலான் படத்திற்கு எதிராக திரும்பி விட்டால் ரொம்பவே சிக்கலாகி விடும் என சியான் விக்ரம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Articles

Next Story