Connect with us
Thangalan

Cinema News

தங்கலான் படம் எப்படி இருக்கு? இவங்க சொல்றது தாங்க உண்மை..!

எவ்வளவு தான் ஒரு படத்தைப் பார்த்து விமர்சகர்கள் டிவியிலும், யூடியூப் சேனல்களிலும் உட்கார்ந்து கொண்டு விமர்சனம் செய்தாலும் ரசிகர்கள் சொல்வது தான் உண்மையாக இருக்கும் என்றே சொல்லலாம்.

ஏன்னா அங்கு தான் கலவையான விமர்சனங்கள் வரும். அந்த வகையில் தங்கலான் படம் இன்று விக்ரமின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி இருக்கிறது. படத்தைப் பார்த்து தியேட்டரில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா…

தங்கலானுக்கு சத்தியமா நேஷனல் அவார்டு கொடுக்கலன்னா இந்த சினிமா இன்டஸ்ட்ரியே இருக்கக்கூடாது. எவ்வளவு வருஷமானாலும் நின்னு பேசும். படம் தரமா இருக்கு. கொடுத்த காசுக்குத் தரமான படம் என்கிறார் ஒருவர். இன்னொருவர் படத்துல மியூசிக், டைரக்ஷன் எல்லாமே நல்லாருக்கு. ஆனா ஸ்டோரிங்கறது இல்ல. அதான் பிரச்சனை என்கிறார். இரண்டரை மணி நேரமும் கதை இல்லை என்று சொல்லி விட்டார் அவர்.

விக்ரமோட ஆக்டிங் நல்லாருக்கு. ஆனா ஸ்டோரி கனெக்டாகல என்கிறார் ஒரு ரசிகர். ஒரு நாட்டோட மக்கள் தங்களுக்கு உரிய வளத்தை எப்படி பெற முடியும்? அதற்கு வரும் சவால்களை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை நல்லாவே எடுத்துருக்காங்க.

Thangalan

Thangalan

படம் ரொம்பவே நல்லாருக்கு. புது அனுபவமா இருக்கு. அந்தக் காலத்துல தமிழர்களை அழைச்சிட்டு வந்து கோலார்ல வேலை பார்க்க வச்ச கதை தான். அதுல பேன்டசியைக் கலந்து சொல்லிருக்காங்க.

பரதேசி மாதிரி இல்ல. இதுல அவங்க பட்ட கஷ்டத்தை நல்லாவே காட்டிருக்காங்க என்கிறார் ஒரு ரசிகர். இன்னொருவர் பா.ரஞ்சித் எடுத்த படத்துல இது மொக்கை படம்னு தான் சொல்ல முடியும். ஆனா ஆக்டிங் சூப்பரா இருக்கு. பர்ஸ்ட் ஆப் சூப்பர் என்கிறார். ஆனா காலா மாதிரி இது இல்ல. ஓகே. என்றும் சொல்லி குழப்பி விட்டார்.

வசனங்கள் புரியவில்லை. சப்டைட்டில் போட்டு இருக்கலாம். 2 கதாநாயகிகள் நடிச்சிருக்காங்க. கஷ்டப்பட்டா தான் சாப்பாடுங்கறதை சொல்லிருக்காங்க. அதே நேரம் ஒருவர் நம் மண்ணுக்காக எப்படி போராடி எடுத்துருக்காங்கன்னு அழகா சொல்லிருக்காங்க இந்தப் படத்துல என்கிறார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top