×

நல்லவேளை! தர்ஷனின் உண்மை திருமணத்துக்கு முன்பே தெரிந்துவிட்டது...பிக்பாஸ் நடிகை போட்ட டிவிட்

சனம் ஷெட்டி தர்ஷன் விவகாரம் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை காஜல் பசுபதி தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக தர்ஷன் மீது சனம் ஷெட்டி சமீபத்தில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஆனால், அந்த புகாரை தர்ஷன் மறுத்தார். அவரின் நடவடிக்கை பிடிக்காமல் அவரிடமிருந்து விலகியதாக தர்ஷன் கூறினார்.

இந்த விவகாரத்தை சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் விவாதித்து வருகின்றனர். தர்ஷனுக்கு சனம் ஷெட்டி நிறைய உதவிகளை செய்துள்ளார். இது எல்லோருக்கும் தெரியும். அவரின் பணத்தை பயன்படுத்தி வளர்ந்த தர்ஷன் தற்போது புகழடைந்ததும் அவரை விட்டு விலகுவது தவறு என ஒரு பெண் தெரிவித்திருந்தார். 

இதற்கு கடந்த சீசனில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற நடிகை காஜல் பசுபதி தெரிவித்துள்ள கருத்தில் ‘ தர்ஷனின் உண்மை முகம் திருமணத்திற்கு முன்பே சனத்திற்கு தெரிந்துவிட்டது. இது ஒருவகையில் நல்லதுக்குதான். திருமணத்திற்கு பின்பு தெரிந்திருந்தால் பிரச்சனை இன்னும் மோசமாக இருந்திருக்கும்’ என பதிவிட்டுள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News