×

எனக்கு நீங்கள் பாடிய பாடல்களுக்கு நன்றி… சல்மான் கான் உணர்ச்சிகரமான டிவீட்!

தமிழ் பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு டிவீட்டைப் பகிர்ந்துள்ளார்.

 

தமிழ் பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு டிவீட்டைப் பகிர்ந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம், உடல்நிலை தேறிவந்த நிலையில் நேற்று மீண்டும் அவர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான் எஸ் பி பிக்கு நன்றி தெரிவித்துள்ளார். சல்மான் கானின் ஆரம்ப கால படங்களுக்கு பாடல்களை பாடியவர் எஸ்பி பி. அதைக் குறிக்கும் பொருட்டு சல்மான் கான் ’ பாலசுப்ரமணியம் சார்.. நீங்கள் சீக்கிரம் குணமடைய உங்களுக்கு எல்லா வலிமைகளும் கிடைக்க என்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகிறேன். எனக்காக நீங்கள் சிறப்பாக பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி, உங்கள் தில் தீவானா ஹீரோ பிரேம், லவ் யூ சார்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News