×

நன்றி தலைவா! ரஜினியை பாராட்டி டிவிஸ்ட் கொடுத்த டிவிட்டர்...

ரஜினியின் டிவிட்டை நீக்கி பரபரப்பை ஏற்படுத்திய டிவிட்டர் நிறுவனம் கொரொனா தொடர்பாக செய்திகள் பகிர்ந்ததற்கு ரஜினிக்கு நன்றி தெரிவித்து டிவிஸ்ட் அடித்துள்ளது.
 

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் 14 மணி நேரத்தில் செயலிழந்து விடும். எனவே,பிரதமர் மோடி செல்வதை கேட்டு வீட்டில் இருங்கள் எனப்பேசி ரஜினி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்றை ரஜினி கூறியதாக பலரும் டிவிட்டருக்கு புகார் தெரிவிக்க அந்த வீடியோவை நீக்கிவிட்டது. இது ரஜினிக்கும், அவரின் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதோடு, சமூகவலைத்தளங்களில் திமுக உள்ளிட்ட பலரும் ரஜினியை கிண்லடித்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், ரஜினி டிவிட்டரில் வெளியிட்ட கொரோனா பற்றிய சிறு அறிக்கையை பகிர்ந்து ‘COVID-19 குறித்த துல்லியமான தகவல்களைப் பரப்புவதை உறுதி செய்வதில் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி தலைவா.’ என டிவிட்டர் இந்தியா பக்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைக்கண்டு உற்சாகமடைந்த ரஜினி ரசிகர்கள் ‘இப்ப பாத்தீங்களாடா எங்க தலைவர் பவரு.. டிவிட்டரே தலைவருன்னு போட்டிருக்குடா’ என பொங்கி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News