×

மக்களைப் பேச வைத்த எல்லோருக்கும் நன்றி – ரஜினி சர்ப்ரைஸ் டிவிட் !

மக்கள் மத்தியில் அரசியல் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் டிவிட் செய்துள்ளார்.

 

மக்கள் மத்தியில் அரசியல் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் டிவிட் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்னதாக சென்னையில் உள்ள ஹோட்டலில் தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது தனக்கு முதல்வர் ஆகும் எண்ணம் இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

அதுமட்டுமில்லாமல் ’மக்கள் மத்தியில் எழுச்சி உருவாக வேண்டும். அரசியலில் புரட்சி ஏற்பட்டு மாற்றம் நிகழும். அப்படி ஒரு மாற்றம் ஏற்படும்போது நான் அரசியலுக்கு வருவேன்எனக் கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு எழுச்சி தானாக உருவாகாது; அதை உருவாக்குபவன்தான் தலைவன் என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊடகங்களும் இதைப்பற்றி விவாதித்த நிலையில் இப்போது ரஜினி ‘அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில்  கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிஎனத் தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News