×

பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி - வீடு திரும்பினார் ஐஸ்வர்யா ராய்!

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர குடும்பமாக ஜொலிக்கும் அமிதாப் பச்சன்  குடும்பத்தில் ஜெயா பச்சனை தவிர அனைவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். முதலில் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். அதையடுத்து மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பதாக ட்விட்டரில் அறிவித்தார்.

 

தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராதனா என ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர்களது குடுப்பதில் அனைவரும் குணமடைந்து மீண்டு வர ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு யாகம் செய்தனர்.

இந்நிலையில் ரசிகர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறியுள்ளது. ஆம், நடிகை ஐஸ்வர்யாராய் மற்றும் மகள் ஆராத்யா இருவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக நடிகர் அபிஷேக் பச்சன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும்,  தானும் தனது தந்தை அபிஷேக் பச்சனும் இன்னும் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர் தங்களது குடும்பத்தினர் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News