×

அட என்னம்மா பிச்சை எடுக்கிறீங்க... டிவில பேமண்ட் வரலையா... 

சின்னத்திரை தொகுப்பாளர் தாப்பா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 
 

ஆதித்யா நகைச்சுவை டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தாப்பா. நேபாளத்தில் இருந்து வந்தாலும், தமிழில் சக்கைப் போடு போடும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் காமெடி ரோலிலும் கலக்கி இருக்கிறார். டான்ஸ் மாஸ்டராக இருக்கும் ரகுவை திருமணம் செய்து கொண்டவர். விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் கலந்து கொண்டார். இந்த ஜோடி செமையாக விளையாடியதால் பைனஸ் வரை சென்றது. 

இந்நிலையில், தாப்பாவின் சமீபத்திய இன்ஸ்டா போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில், பிச்சை எடுக்கும் பெண் போல அமர்ந்து இருக்கிறார். இது என்னடா தாப்பாக்கு வந்த சோதனை என கமெண்ட் பகுதியை ஆராய்ந்தால் ஏதோ சீரியலுக்கான சூட்டிங் எனக் கூறப்படுகிறது. மேடம் ஆனா பிச்சை கெட்டப்புக்கு ஐபோனுலாம் கொஞ்சம் ஓவரா இல்ல..

From around the web

Trending Videos

Tamilnadu News